Home சூடான செய்திகள் கன்னடத்தில் ரீமேக்காகும் டர்ட்டி பிக்சர்: சில்க் வேடத்தில் வீணா மாலிக்

கன்னடத்தில் ரீமேக்காகும் டர்ட்டி பிக்சர்: சில்க் வேடத்தில் வீணா மாலிக்

49

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான தி டர்ட்டி பிகச்ர் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக் சில்க் வேடத்தில் நடிக்கிறார்.

தென்னிந்திய கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தி படமான தி டர்ட்டி பிக்சர் தற்போது தமிழைத் தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் செய்யப்படுகிறது. கன்னடத்தில் தி டர்ட்டி பிக்சர்: சில்க் ஹாட் மகா என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இதில் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக் சில்க்காக நடிக்கிறார்.

இந்த படத்தை திருஷுல் இயக்குகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக கடந்த 4-5 மாதங்களாக வீணா மாலிக்கை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவர் லண்டன், துபாய், பாகிஸ்தான் என்று மாறி, மாறி சென்று கொண்டிருந்தால் எங்களால் அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போனது. இதற்கிடையே நிகிதா அல்லது பூஜா காந்தியை சில்க்காக நடிக்க வைக்கலாம் என்று நினைத்தோம். அதுவும் சரிவரவில்லை. இதையடுத்து வீணா மாலிக்கை ஒரு வகையாக தொடர்பு கொண்டு சிலக்காக நடிக்க கேட்டோம். அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.

இந்தியில் வந்த டர்ட்டி பிக்சரில் சில்கின் நிஜ வாழ்க்கையில் நடந்ததை அப்படியே சொல்லவில்லை. அதில் மிஸ்ஸான பல விஷயங்கள் என் படத்தில் இருக்கும்.

உதாரணமாக ஒருமுறை சில்க் கடித்து வைத்த ஆப்பிள் ரூ. 1 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. அதேபோல ஹீரோக்களை விட தானே பெரிய ஆள் என்ற எண்ணம் எப்போதுமே சில்க்குக்கு உண்டு. இதுபோன்றவற்றை நம் ஊருக்கு ஏற்றவாறு காண்பிப்போம்.

சில்க்கின் உண்மை கதையை கேட்டுவிட்டு வீணா உருகிவிட்டார். என் படக் கதையைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டார். போக்குவரத்து செலவு உள்பட வீணாவின் சம்பளம் ரூ.1 கோடி. அவர் முத்தக் காட்சி, டூ பீஸில் நடிக்க சம்மதித்ததோடு தனது குரலிலேயே டப் செய்கிறார்.

இந்த படம் பாலிவுட் படத்தில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்றார்.

இந்த படத்தில் இயக்குனரின் மகன் அக்ஷய் நடிக்கிறார். படம் பற்றி அக்ஷய் கூறுகையில், எனது தந்தை இயக்கும் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் 2 சண்டைக் காட்சிகள் இருக்கும். மேலும் சில்க் படங்களில் நடித்த மூத்த கலைஞர்கள் இதில் கெஸ்ட் ரோலில் வருவார்கள் என்றார்.

வீணா சும்மா வந்தாலே சூடு பறக்கும், இந்த நிலையில் ‘ஹாட் மகா’ அவதாரம் வேறு எடுக்கிறார்… என்னாகப் போகுதோ…!