Home சமையல் குறிப்புகள் கத்தரிக்காய் பருப்புக் கூட்டு

கத்தரிக்காய் பருப்புக் கூட்டு

26

தேவையான பொருள்கள்:
கத்தரிக்காய் = அரை கிலோ
துவரம் பருப்பு = 100 கிராம்
பெருங்காயம் = சிறிது
வெங்காயம் = 2
பூண்டு = 5 பல்
வெந்தயம் = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் = 5
புளி = தேவையான அளவு
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காயை பிஞ்சாக வாங்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். துவரம் பருப்பை பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வைத்து வேக வைத்து கொண்டு கடைந்து கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைக்கவும். கடுகு, வெந்தயம், சீரகம், மிளகாய் வற்றல் முதலியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். இதை கரகரப்பாக பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கத்தரிக்காயை போட்டு வதக்கவும். 5 நிமிடம் வதக்கியதும் கரைத்து வைத்துள்ள புளியை விட்டுக் கிளறி உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரை கப் தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். நடுநடுவில் கிளறி விடவும். முழுக்க நீர்பதம் வற்றிய பிறகு இறக்கி வைத்து பொடித்து வைத்துள்ள பொடியையும், கொத்தமல்லியையும் தூவி இறக்கவும்.
சுவையான கத்தரிக்காய் பருப்புக் கூட்டு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, பொங்கல், உப்புமா போன்றவற்றோடு பரிமாறலாம்.