Home பெண்கள் அழகு குறிப்பு கண்களின் கருவளையத்தைப் போக்க சில குறிப்புகள்

கண்களின் கருவளையத்தைப் போக்க சில குறிப்புகள்

32

கண்களின் கீழ் இமைகள் பெருத்துப் போவதால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருமை நிறமே கருவளையம் எனப்படுகிறது.
இது பொதுவான ஒரு நிலை தான் என்றாலும், தோற்றத்தைப் பாதிப்பதால் இது குறித்து பலர் அதிகம் கவலைப்படுவதுண்டு, குறிப்பாக பெண்கள் இதனை முக்கயமான பிரச்சனையாகக் கருதலாம். இதைச் சரிசெய்வதற்கு பலர் பலவிதமான வீட்டு வைத்தியங்கள் செய்வார்கள், பல அழகு சாதனத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், உங்கள் கருவளையத்திற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்ற தீர்வை நாடுவது மிக முக்கியம், இல்லாவிட்டால் அது இன்னும் மோசமாகலாம்.

காரணங்கள் (Causes):
இதற்கு முதுமை ஒரு காரணம், அத்துடன் வேறு சில காரணங்களும் உள்ளன:
ஒவ்வாமைகள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள்
களைப்பு
மரபுவழிக் காரணங்கள்
மன அழுத்தம்
நீண்ட நேரம் சூரிய ஒளி படுதல்
தூக்கமின்மை
களைப்பு
மாதவிடாய்
இரத்தசோகை
மூக்குக் கண்ணாடி அணிதல்
கணினிகள்
ஆல்கஹால் அதிகமாக எடுத்துக்கொள்ளுதல்
செய்யவேண்டியவையும் செய்யக்கூடாதவையும் (Do’s and don’ts):
உங்கள் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நன்றாகத் தூங்குவதால் உங்கள் கண்கள் ஒய்வு பெற்று தளர்வடையும்
ஒவ்வாமை காரணமாக எரிச்சல் இருக்கலாம், கண்களைக் கசக்குவதைத் தவிர்க்கவும்
சன் கிளாஸ் அணியலாம்
அதிகம் கணினி பயன்படுத்துபவர் என்றால், அவ்வப்போது கண்களுக்கு ஒய்வு கொடுக்கவும்.
அதிக நீர் அருந்தவும்
கண் இமைகள் மீது வெள்ளரி, உருளைக்கிழங்குத் துண்டுகளை சிறிதுநேரம் வைத்திருப்பது ஒரு பிரபலமான வீட்டு வைத்திய முறை
கரு வளையங்கள் நன்கு தெரியாதபடி செய்வதற்கு, கன்சீலர்களைப் பயன்படுத்தலாம்
மருத்துவ மற்றும் அழகு சிகிச்சைகள் (Medical and Cosmetic treatments):
ஹைட்ரோகுவினோன்
ரெட்டினோயிக் அமிலத்தை மேற்பூச்சாகப் பயன்படுத்துதல்
இரசாயனங்களைப் பயன்படுத்தி தோலுரித்தல்
ஆட்டோலோகஸ் ஃபேட் டிரான்ஸ்ப்ளேன்டேஷன் (அதே நபரின் உடலில் இருந்தே கொழுப்பை எடுத்துப் பொருத்தி செய்யும் சிகிச்சை)
Q-ஸ்விட்ச்டு ரூபி லேசர் அல்லது Q-ஸ்விட்ச்டு அலெக்ஸான்ட்ரைட் லேசர்
வெண்படல இமைச்சீரமப்பு அறுவை சிகிச்சை (டிரான்ஸ்-கஞ்சங்க்டிவல் ப்லெஃபரோப்ளாஸ்டி)

எச்சரிக்கை (Red flags):
உங்கள் கருவளையங்கள் அதிகரித்தால், மருத்துவ ரீதியான காரணங்களால் அது ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.