வீட்ல சின்னதா பிரச்சினையா? கணவர் கோவிச்சிட்டு ஆபிஸ் போயிட்டாரா? என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து அலுத்துவிட்டதாக கவலைப் படாதீர்கள். வாழ்க்கையில் சின்ன சின்ன ஊடல்கள் இருந்தால்தான் இரவு நேர கூடல்களில் சில சுவாரஸ்யங்கள் இருக்கும். கணவரை வழிக்கு கொண்டு வர நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
மெசேஜ் தட்டி விடுங்க
பத்து வருடங்களுக்கு முன்பு வரை செல்போன் பயன்பாடு இந்த அளவிற்கு இல்லை. அப்பொழுது பேஜர் காலம்தான். கணவர் கோவித்துக் கொண்டால் அவரை சமாதானப்படுத்த அதிக அளவில் ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புவார்களாம். இப்பொழுது அப்படியில்லை செல்போனில் விரல் நுனியில் விளையாடுகிறார்கள். நூறு என்ன ஆயிரம் முறை ஐ லவ் யூ மெசேஜ் தட்டி விடுங்கள். ஒரு கோடி மன்னிப்பு கேளுங்கள். பல லட்சம் முத்தங்களை அனுப்புங்கள். அப்புறம் பாருங்கள் உங்களவருக்கு உங்கள் மீது கோபமாவது வருவதாவது. எப்போதடா ஆபிஸ் முடியும் என்று காத்துக்கொண்டிருப்பார்.
பிடிச்ச கலரு கருப்பு
கருப்பான உடைகள் அனைவருக்குமே ஏற்ற ஆடைகள்தான். அதிலும் மாலை நேரத்தில் கணவன் அலுவலகத்தில் இருந்து வரும்போது மனைவி கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தால் போதும் ஆசை அள்ளிக்கொண்டு போகும். செக்ஸ் மூடு எளிதில் ஏற்படும்.
கவர்ச்சியான வெள்ளை
வெண்மை நிறம் நமது உடலமைப்பை அப்படியே கவர்ச்சிகரமாக எடுத்துக்காட்டும். வெண்மை நிற ஆடை அணிந்திருந்தால் அதுவும் அந்த ஆடை கொஞ்சம் மென்மையாக டிரான்ஸ்பரன்டாக இஐந்தால் போதும் உங்களவருக்கு உங்கள் மீது கோபம் வர வாய்ப்பே இல்லை.
குதிகால் உயர செருப்பு
குதிகால் உயர செருப்புகள் கால் அழகை அதிகரித்துக் காட்டும். இது மாதிரியான குதிகால் உயர செருப்புகள் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் கால் அழகைப் பார்த்த உடல் உங்கள் கணவரின் கண்கள் ஆசையில் மின்னுமே.
அழகான பின்புறம்
பெண்களுக்கு பின்புறம் எடுப்பாக அழகாக இருந்தால் அதை விரும்பாத ஆண்களே இல்லை எனலாம். அது பெண்களுக்கு கூடுதல் கவர்ச்சியை தரும். எனவே உங்கள் பின்னழகை மெயிட்டெயின் செய்யுங்கள் உங்களவருக்கு உங்கள் மீதான காதலை அதிகரிக்கும்.
உள்ளாடைக்கு பை
மார்பகத்தை சரியான அளவாக எடுத்துக்காட்டுவது ப்ரா. அதை அணிவது அழகு அதிகரிக்கும்தான் என்றாலும் ப்ரா அணியாமல் இருந்தால் உங்கள் கணவரை எளிதில் அட்ராக்ட் செய்ய முடியுமாம். மாலையில் உங்களவர் அலுவலகம் முடிந்து வரும் போது தலைக்கு குளித்து விட்டு லூஸ் ஹேர் விட்டு அதில் கொத்தாய் மல்லிகை சூடி ப்ரியாய் நைட்டி அணிந்து அவருக்கு வரவேற்பு கொடுங்களேன். அலுவலகத்தில் இருந்து இனிமேல் அவர் லேட்டாகவே வரமாட்டார்.
இன்னைக்கே இந்த ஆலோசனைகளை பின்பற்றிப் பாருங்களேன்.