Home உறவு-காதல் கணவன் மீது மனைவிக்கு இருக்கும் உரிமைகள்

கணவன் மீது மனைவிக்கு இருக்கும் உரிமைகள்

35

captureஉலக அளவில் பெண்களுக்கான தனி சுபாவம், குணாதிசயங்கள் என சில பிரிக்கப்பட்டிருந்தாலும் கூட, நமது பாரம்பரியத்தின் சாயலாக நம் நாட்டு பெண்களுக்கு கணவன் மீதான உரிமை என்பது கொஞ்சம் எல்லை தாண்டியது தான். இதை எல்லை தாண்டிய சுபாவம் என்று கூறுவதை விட, எல்லை தாண்டிய காதல் என்று கூறலாம். ஆம், கரைபுரண்டு ஓடும் பெண்களின் காதல் தான் உரிமைக் கொண்டாடுதலாக என காணப்படுகிறது….

மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் சரி, கிராமத்து பெண்ணாக இருந்தாலும் தனது கணவனை வேறு பெண்கள் புகழ்வதை விரும்ப மாட்டார்கள். பெரிதாக தங்கள் கணவன் சாதித்திருந்தாலும் கூட வேறு பெண்கள் புகழ்ந்தால், மனைவிகளுக்கு வயிற்றில் கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்யும்.

என் கணவனை அடிக்கவும், உதைக்கவும், திட்டவும், கொஞ்சவும் என அனைத்திற்கும் தனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்பது இந்திய பெண்களின் குணம். இது ஒருவகையில் இந்திய பெண்களின் கலாச்சாரம் என்று கூட கூறலாம்.

உரிமை கொண்டாடுதல் ஆங்கிலத்தில் நாம் கூறும் Possesiveness, பெண்களுக்கு அதிகம் தான். சில சமயத்தில் மற்றவர்கள் இது கொஞ்சம் ஓவர் என்று கூறலாம். ஆனால், இது அதிகப்படியான காதலின் வெளிபாடு என்பது தான் உண்மை. ஆண்களை விட, கோபத்தையும், காதலியும் மிக அதிகமாக வெளிப்படுத்தும் சுபாவம் பெண்களுக்கு உண்டு. எனவே, இதை எந்த தருணத்திலும் உதாசீனம் செய்துவிட வேண்டாம்.

பொதுவாக நமது தமிழக தாய்களின் வளர்ப்பு முறையும் கூட இதற்கு காரணமாக இருக்கிறது. “புருஷன முந்தானையில முடிஞ்சு வெச்சுக்கடி..” என்று கூறி வளர்ப்பது உண்டு. இல்லையேல் கணவன் வேறு பெண் மீது ஆவல் கொண்டுவிடுவான் என்று கூறுவார்கள். இது உண்மையும் கூட. ஆண்களுக்கு போக போக எந்த வேலையாக இருந்தாலும் சலிப்பு ஏற்பட்டுவிடும். எனவே, பெண்கள் தான் ஜாக்கிரதையாக நடந்துக் கொள்ள வேண்டும்.

அம்மாவின் வளர்ப்பு என்று கூறினாலும், பெண்களின் பொதுவான இயல்பே இது தான் என்றும் கூறலாம். ஆம், பொதுவாகவே குழந்தைகளாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி அவர்கள் மீது தாய்மை அடைந்த பெண்ணானவள் அதிகமான உரிமை கொண்டாடுவாள். இது பெண்களின் இயற்கை குணாதிசயங்களில் ஒன்று.

தாங்கள் உரிமை கொண்டாடியும் ஆண்கள் விலகி விலகி சென்றால், கணவன்மார்கள் மனைவியின் காளி சொரூபத்தை காண வேண்டிய கட்டாயம் நேரிடும். இவை அனைத்துமே அவர்கள் தங்கள் துணையின் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு தான் என்பதை ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சில ஆண்கள், தங்கள் மனைவி தன் மீது அதிகம் உரிமை கொண்டாடுவதை, சுதந்திரமாக செயல்பட தடையாக இருப்பதாக கருதுவது உண்டு. உண்மையில், பெண்கள் உங்கள் மீது உரிமையாக இல்லை என்றால் தான் நீங்கள் கவலைப்பட வேண்டும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.