கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் என்பது கட்டாயம் வராமல் இருக்காது. பிரச்சனைகள் வந்தால் தான் அது குடும்பம். ஆனால், அந்தப் பிரச்சினையே குடும்பமாக இருக்கக்கூடாது. சில வீடுகளில் பார்த்தால் பரம்பரை பரம்பரையாக குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத சூழ்நிலை நிலவும். எப்படி என்றால், அந்த குடும்பத்தில் இருக்கும் பெண்கள் யாருமே கணவரோடு சேர்ந்து வாழ மாட்டார்கள். அந்த குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் மனைவியோடு சேர்ந்து வாழாமல் இருக்கும் சூழ்நிலை வரும். மொத்தத்தில் அந்த குடும்பத்தில் கணவன் மனைவி அன்பு என்ற பாசத்திற்கு இடமிருக்காது. யாரோ சாபம் விட்டது போல தொடர்ந்து குடும்பத்தில் பிரிவுகள் உண்டாகும்.
இந்த கணவன் மனைவி உறவை தவிர்த்து சில வீடுகளில் சகோதர ஒற்றுமை, பிள்ளைகளோடு ஒற்றுமை, உறவுகளோடு ஒற்றுமை இப்படியாக ஒற்றுமை பாசம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. ஆளாளுக்கு ஒரு பக்கம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டில் நிம்மதியே இல்லாமல் வாழ்ந்து வருவார்கள். இப்படிப் பட்டவர்களும் இந்த நம்பரை பயன்படுத்தி பலன் அடையலாம்.
அன்பு இல்லாத இடத்தில் அன்பை கொண்டுவந்து சேர்ப்பதற்கு இந்த சூட்சமம் எண் பயனுள்ளதாக அமையும். தவறாக யாரும் யாரும் இதை உபயோகப்படுத்த கூடாது. கட்டாயமாக அது நடக்காது. நல்ல விதத்தில் நல்ல உறவுகள் அன்போடு சேர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த சூட்சம எண்ணினை பயன்படுத்தி பாருங்கள். அந்த நம்பர் என்ன. அந்த நம்பரை எப்படி பயன்படுத்த வேண்டும்.
பிரச்சனை உள்ள இடத்தில் அன்பு இல்லாத இடத்தில் அன்பை வெளிப்படுத்தக்கூடிய எண் 528. ஒரு சிறிய வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவே கொஞ்சம் மஞ்சளை மட்டும் தடவிக் கொண்டால் போதும். மஞ்சள் நிறத்திற்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி உள்ளது. அதன் பின்பு ஒரு பச்சை நிற பேனாவை எடுத்து இந்த 528 என்ற எண்ணை அந்த பேப்பரில் எழுதி விடுங்கள்.
யார் யாருக்கு அதிகமாக சண்டை உள்ளது. யார் யாரின் மீது அதிகமாக பாசம் காட்ட வேண்டும், அன்பு செலுத்த வேண்டும், என்று நினைக்கிறீர்களோ அந்த 2 நபரை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். கணவன் மனைவியின் பெயராக இருக்கலாம். அப்பா பையன், அம்மா மகள், இப்படி எந்த இரண்டு பேரை வேண்டுமென்றாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்த பெயரையும் அந்த பேப்பரில் எழுதி விடுங்கள்.
உங்களுடைய வீட்டில் வாசனை மிகுந்த பன்னீர் இருந்தால் அதை கொஞ்சம் எடுத்து அந்த பேப்பரில் தெளித்துக் கொள்ளலாம். பன்னீர் இல்லாத பட்சத்தில் எந்த வாசனை திரவியத்தை வேண்டுமென்றாலும் இந்த பேப்பரில் ஸ்ப்ரே செய்து விட்டு, அந்த பேப்பரை அப்படியே மடித்து உங்களுடைய துணி வைக்கும் அலமாரியில் இருந்த பேப்பரை வைத்து விடுங்கள்.
அந்த பேப்பரில் இரண்டு நபருடைய பெயரை எழுதி இருப்பீர்கள். அந்த இரண்டு நம்பரில் உங்களுடைய பெயர் இருந்தால் இந்த பேப்பரை உங்களுடைய துணி வைக்கும் அலமாரிகளில் வைத்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தினை நீங்கள் உங்களுடைய மகன், மருமகளுக்கோ அல்லது மகள் மருமகனுக்கோ செய்வதாக இருந்தால் அவர்களில் யாராவது ஒருவருடைய துணிக்கு இடையே இந்த பேப்பரை வைக்க வேண்டும். அவ்வளவு தான்.
இந்த பேப்பரை துணிகளுக்கு இடையே வைத்து விட்டு அப்படியே விட்டு விடுங்கள். கட்டாயமாக அந்த பேப்பரில் இருக்கும் அந்த இரண்டு நபர்களுக்கு இடையே உள்ள சண்டைகள் படிப்படியாக குறைந்து ஒற்றுமை அதிகரிப்பதை கண்கூடாக காணலாம். பிரிந்த தம்பதியர்கள் மீண்டும் சேர்வதற்கு கூட நிறையவே வாய்ப்பு உள்ளது. நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு மட்டும் இந்த பரிகாரம் நல்ல பலனைக் கொடுக்கும் என்று கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.