எங்க பக்கத்து வீட்டுக்கு பொண்ணுக்கு, எப்போ பார்த்தாலும் புலம்புவதே வேலையா இருக்கும். கணவன் குடும்பத்திற்காக மாங்கு மாங்குன்னு உழைத்தாலும், அவளுடைய ஆடம்பர செலவுக்கு பணம் தரவில்லை என்று சொல்லி தினமும் இரவு ஒரே சண்டையா இருக்கும். பொண்ணு அழகா இருக்கேன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததன் விளைவை, அவரு நல்லாவே அனுபவிக்கிறாரு. செய்யறதெல்லாம் செய்துவிட்டு, ஊரார் மத்தியில், என்னுடைய புருஷன் என்னிடம் அன்பாவே பேச மாட்டேங்குறாரு என்று புலம்புவாள்.
ஒரு முறை எங்க வீட்டுக்கு வந்து, அக்கா! அவரு என்னைய நல்லாவே பார்த்துக்கிறது இல்ல, அவரிடம் கிடைக்காத அன்பு வெளியில் இருந்து கிடைத்தால், அது தப்பான்னு? ஒரு கு ண்டை தூக்கிப்போட்டாள். “அடியே! சண்டாளி ஒண்ணு சொல்றேன் நியாபகம் வெச்சுக்க. இன்னைக்கு புருஷன் செலவுக்கு பணம் தரலைன்னு சொல்லி அடுத்தவன்கிட்ட போன, அவன் உன்னை வெறும் போகப்பொருளாக மட்டும் தான் பார்ப்பான். அவனுடைய ஆசை தீரும் வரைக்கும் தான் நீ எதிர்பார்த்த அன்பு கிடைக்கும். ஆனால் உன்னை கடைசி வரைக்கும் வெச்சு கஞ்சி ஊத்தப்போறது உன் புருஷன் தான்” என்று கோவத்தில் ஒரு பிடி பிடித்து விட்டேன் அவளை.
இந்த மாதிரியான எண்ணம் எல்லாம் நீ நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு வீட்டில் தூங்குவதால் தான் வருது. ஒழுங்கா வேலைக்கு போயி உன் செலவுக்கான காசு சம்பாரிக்க பாரு என்றேன். அப்பவும் திருத்திருன்னு விழித்துக்கொண்டே நின்றாள். தப்பு பண்ண வாய்ப்பு வந்திருக்கும் போல, இருந்தாலும் உள்மனதில் கொஞ்சம் உறுத்தல் இருந்ததால் என்னிடம் வந்து கேட்டிருக்கிறாள். வேறு ஒரு உறவிற்கு போய் விட்டால், திரும்பி வர வழி இல்லை. கணவன் மனைவி என்கிற உறவை முறித்துதான் ஆக வேண்டும்.
கணவரது அன்பு கிடைக்கவில்லையென்று, அன்பு செலுத்தும் வேறொருவருடன் ப டுக்கையைப் பகிர்ந்தால், அதற்கு பெயர் அன்பை பெறுவதல்ல, அடுத்தவர் மீதான மோகம் தான் என்பதை அவளுக்கு சொல்லி புரிய வைத்தேன். இதற்கு மேலும், உன் மனது மாறவில்லை என்றால், தயவு செய்து அந்த நல்ல மனுஷனிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டு, நீ என்ன கன்றாவி வேணும்னாலும் பண்ணிக்கோ, தயவு செய்து குடும்ப மானத்தை கெடுத்துறதன்னு சொன்ன பிறகே பயந்து பின் வாங்கினாள். இந்த மாதிரி தடம் மாறி போறவங்களிடம் மனம் விட்டு பேச ஆள் இல்ல, அதான் பல குடும்பங்கள் சீரழிய காரணமா இருக்கு.