ஆண்களில் உள்ள ஓரின சேர்க்கையாளர்களை பற்றியது..இதில் மூன்று பிரிவுகளாக விருப்பமுடையவர்கள் இருக்கிறார்கள்..அது
டாப்பா?பாட்டமா?வெர்சட்டயிலா? (top, bottom or verstaile)என்பதுதான்….
இதைப்பற்றிய முழுமையான தெரிதலும்,புரிதலும் அனைவருக்கும்
ஒன்றுபோல இல்லை என்றாலும்,இதைப் பற்றி ஆராய்ந்த ஜெஸ்ஸி பெரிங் (Institute of Cognition and Culture at Queen’s University Belfast in Northern Irelandஎன்ற நிறுவனத்தின் இயக்குனர் இவர்…. உளவியல் ரீதியாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர் இவர்) ஒரு தெளிவான ஆய்வின்
முடிவை கூறினார்….. அதாவது, “டாப் என்றால் கொடுப்பவன்,பாட்டம்
என்றால் பெறுபவன்….. கொடுப்பது என்றால் புணரும்போது ஆண்மையை உள்ளே செலுத்துபவன்,பாட்டம் என்றால் ஆண்மையை தனக்குள்
(ஆசனவாய் அல்லது வாய்) உள்வாங்கிக்கொள்வது” என்று ஒரு சிறிய தெளிவான விளக்கம் கொடுத்தார்….. மேலும் சில விளக்கங்களும் கொடுத்தார்….. அதிக இன்பமும்,குறைவான கஷ்டமும் அடைபவன் டாப்….அதே போல,குறைவான இன்பமும்,அதிக கஷ்டமும் பெறுபவன் பாட்டம்…. இந்த
இரண்டு முரண்களுக்கும் மத்தியில் ஒரு கோடாக பயணிப்பது வெரச்டையில் வகை….. நேரம் மற்றும் சூழலுக்கு தகுந்தாற்போல எல்லாவற்றையும் அனுபவித்து இன்பம் அனுபவிப்பவர்கள் இந்த வகையை சேர்ந்தவர்கள்……
இவரே இன்னொரு சந்தேகத்தையும் எழுப்புகிறார்….. புணர்தலில்
ஆர்வமில்லாதவர்களை இதில் எந்த பட்டியலில் சேர்ப்பது?என்பதுதான் அவர்
சந்தேகம்….. அதேபோல இன்னும் பலர் தங்களை நான் மேற்சொன்ன
மூன்று பிரிவுகளுக்குள்ளும் தங்களை இணைத்துக்கொள்ள
விரும்பாமல் தங்களை “கே” என்று மட்டுமே அடையாளப்படுத்தி
க்கொள்வதையும் ஜெஸ்ஸி பெரிங் குறிப்பிடுகிறார்…. அதனால் இத்தகைய
நபர்களை மேற்சொன்ன பிரிவுகளுக்குள் பிரிக்காமல் இருப்பதே சிறந்தது என்றும் கூறுகிறார்….. அதேபோல பாட்டம் நபர்களைவிட டாப் நபர்கள் அதிகமான செக்ஸ் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பதாகவும்,பெரும்பாலான
நேரங்களை செக்ஸ் பற்றிய சிந்தனையில் மட்டுமே கழிப்பதாக கூறுகிறார்……
அதே நேரத்தில் டாப் நபர்கள் தங்களை ஒரு “கே” வாக காட்டிக்கொள்ள
பயந்து(homophobia) ,அதனால் பெண்களிடம் செக்ஸில் ஈடுபட்டு அதன்மூலம் தன் கே அடையாளத்தை மறைக்க முயல்கிறார்கள்…….. அதே நேரத்தில்
பெரும்பாலான பாட்டம்’கள் தாழ்வுமனப்பான்மை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்…. உளவியல் ரீதியாகவும் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் டாப்’களைவிட பாட்டம்’களே அதிகம்….. இந்த இரண்டு பிரிவுகளிலும் அப்படி சில தவறுகள் இருந்தாலும்,மூன்றாவது வகையான வெர்சட்டையில்
வகையினர் உளவியல் ரீதியாக மற்றவர்களைவிட பலமானவர்களாகவும் ,செக்ஸ்’இல் திருப்தி உடையவர்களாகவும் இருப்பதாக ஜெஸ்ஸி கூறுகிறார்…..
இந்த பிரிவுகள் பெரும்பாலும் இயற்கையாகவே ஒருவருக்கு தோன்றுவதாக
இருந்தாலும்,பல நேரங்களில் இதை தீர்மானிக்கும் காரணிகளாக
ஒருவரின் தோற்றமும்,சமூக சூழலும் மற்றும் தேவைகளுமே தீர்மானிக்கிறது….. டாப்பாக இருக்கும் ஒருவர்,டாப்பாக
செயல்பட மனதளவில் நினைக்கும் ஒருவர்,சில சூழல்களால் பாட்டமாக
தள்ளப்படுவது நடப்பதுண்டு…. ஒருவர் தொடர்ந்து செக்ஸில் மற்றவர்களால்
புறக்கனிக்கப்படும்போது,ஒரு கட்டத்தில் புறக்கணிப்பை தவிர்க்க அடுத்தவர்களுக்கு சேவை (?)செய்யும் பொருட்டு பாட்டமாக
மாறிவிடுகிறான்….. அதனால்தான் ஜெஸ்ஸி இதை தீர்மானிக்க முக்கிய
காரணியாக ஒருவரின் தோற்றத்தை குறிப்பிடுகிறார்…..
மொஸ்கோவிட்ஸ்,ரெய்கர் மற்றும் ரோலோப் ஆகியோர் இதில்
குறிப்பிடுவது, “இரண்டு ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் இனைந்து காதல் மற்றும் திருமண வாழ்வை மேற்கொள்ள விரும்பினால்,இந்த
விருப்பங்களை பற்றி முன்னரே பேசிவிட்டு தங்கள் ரோல்’களை தீர்மானித்துக்க கொள்வது வாழ்நாள் முழுவதும் தங்கள்
உறவுகளை மேம்படுத்த சிறந்த வாய்ப்பாக அமையும்…. ”
என்று கூறுகிறார்கள்…. இரண்டு டாப் மற்றும் இரண்டு பாட்டம் தங்கள் வாழ்வில் அத்தகைய ஒரு வாழ்நாள் உறவை மேம்படுத்த
முடியாது என்றும் கூறுகிறார்கள்….. டாப் என்பவர்கள் கோபமும்,ஆத்திரமும்
அதிகம் அடையும் மனநிலை உடையவர்கள் என்றும் கூறுகிறார்கள் இவர்கள்….. அதனால் பாட்டம்’களே அதிகமாக சூழ்நிலை அறிந்து விட்டுக்கொடுப்ப
தும் நடப்பதாக கூறுகிறார்கள்….. நாம் மேற்கண்ட மூன்று பிரிவுகளான
(top, bottam, versatile)என்பதை மட்டும் கண்ட நமக்கு தெரியாமல்,இன்னும்
இரண்டு பிரிவுகள் இருக்கின்றன…..அவர்களைservice topமற்றும்power
bottomஎன்று குறிப்பிடுகிறார்கள்….. இரண்டு டாப்’கள் உறவு கொள்ளும்போது அதில்,ஒரு டாப் தன நிலையை மாற்றி பாட்டமாக செயல்படுவான்,அவனை சர்வீஸ் டாப் என்று கூறுகிறார்கள்….. அதே போல இரண்டு பாட்டம்கள்
உறவு கொள்ளும்போது,அதில் ஒருவர் டாப்’ஆக மாறுவார்கள்,அவர்களை பவர்
பாட்டம் என்று கூறுகிறார்கள்….. ஆகமொத்தம் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட
டாப்,பாட்டம்,வெர்சட்டையில் என்ற மூன்று நிலைகளுடன்,இந்த சர்வீஸ்
டாப்,மற்றும் பவர் பாட்டம்’களை சேர்த்து மொத்தம்
ஐந்து பிரிவுகளாக சொல்லலாம்…இதில் இந்த ஐந்து வகைகளுக்குள் நீங்கள்
உங்களை சுருக்கிக்கொள்வதாக இருந்தாலும்,பறந்து விரிந்து சிந்தித்து ஒரு “கே”வாக உங்களை அடையாளப்படுத்தி க்கொள்வதும் உங்கள் விருப்பம்…..
தனிப்பட்ட ஒருவரின் விருப்பங்கள்தான் இருவரின் உறவை தீர்மானிக்க
வேண்டுமே தவிர,இதைப்போன்ற “சட்டம்” போட்டல்லாம் நம்மை சுருக்க
வேண்டாம்.