தலைமுடி உதிர்வதற்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை, தலைமுடிக்கு போதிய ஊட்டச்சத்து இல்லாமை, தூசுக்கள், மாசு போன்ற பல காரணங்கள் உண்டு. அவ்வாறு உண்டாகும் முடி உதிர்வைத் தடுக்க என்ன வழி?
தலைமுடி உதிர்வைத் தடுப்பதற்கும் முடி செழித்து நீண்டு வளர்வதற்கும் தலைமுடியின் ஊட்டச்சத்து மிக அவசியம்.
அதற்காக பெரிதான ஒன்று செலவு செய்யத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்ட முடியும்.
இதற்கென பெரிதாக எதுவும் செலவு செய்யத் தேவையில்லை. நீங்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் தேங்காய் மட்டுமே போதுமானது.
பயன்படுத்தும் முறை
நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் வைட்டமின் ஈ மாத்திரைகள் 2 எடுத்து பிழிந்துவிடுங்கள். ஸ்பூன் கொண்டு நன்கு கலக்கிவிட்டு, அதை முடியின் வேர்க்கால்களில் இறங்கும்படி தேய்த்து 10 நிமிடங்கள் வரை மென்மையாக தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து மிக மென்மையான ஹெர்பல் ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து தலையை அலச வேண்டும்.
இம்முறையை வாரத்துக்கு இரண்டு முறை மட்டும் செய்யுங்கள். ஓரிரு வாரங்களிலேயே முடி உதிர்வது நின்று முடி நன்கு வளர ஆரம்பிப்பதை உணர்வீர்கள்.