ஆண்கள் சந்தோஷமாய் இருந்தால் பெண்களுக்கு அது பிடிக்காது. இது இந்த காலத்தில் மட்டுமல்ல அந்த காலத்திலும் கூடத்தான்
அப்படிதாங்க அந்த காலத்தில் பெண்கள் எல்லோருக்கும் ஒன்று கூடி நாம பத்து மாசம் கஷ்டப் பட்டு பிள்ளையை வயிற்றில் சுமந்தும் பிள்ளை பெறும் போதும் வலியால் துடிக்கிறோம் ஆனால் அதற்கு காரணம் ஆனா ஆண்கள் எந்த பிரச்சனை இல்லாமலும் சந்தோஷமாக இருக்கிறார்கள் இதற்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கருதி எல்லோரும் சேர்ந்து பிரம்மாவிடம் முறையிட்டார்கள். பிரம்மாவே நாங்கள் 10 மாதம் கஷ்டப்பட்டு குழந்தையை சுமக்க தயார் ஆனால் பிள்ளை பெறும் போது உண்டாகும் வலியை அந்த குழந்தையின் தந்தைக்கு தரம் வேண்டுமென்று முறையிட்டனர். ஆனால் பிரம்மா அதெல்லாம் வேண்டாம் அப்படியெல்லாம் கேட்காதீர்கள் என்று சொன்னார். ஆனால் அவர்கள் பிரம்மாவை வற்புறுத்தி அந்த வரத்தை பெற்றுக் கொண்டனர். அதன் படி குழந்தை பிறக்கும் போது அதன் தந்தைக்கு வலி யெடுக்கும் என்று சொல்லி அவரும் மறைந்து விட்டார்
அதன் பிறகு ஒரு பெண் முதன் முதலில் குழந்தை உண்டாகி குழந்தை பெறும் சமயம் வந்தது. அப்போது அந்த பெண் கடை வைத்திருக்கும் தன் கணவர் வலியால் துடிப்பார் என்று கருதி வீட்டில் இருந்த சகோதரனை கடைக்கு சென்று கணவருக்கு உதவி செய்யுமாறு அனுப்பினார். அவனும் கடைக்கு சென்று அவரிடம் விஷயத்தை சொன்ன போது அவர் சொன்னார் எனக்கு வலி ஏதுமில்லையே என்று சொல்லி சரி வா வீட்டிற்கு சென்று பார்ப்போம் என்று சொல்லி சென்றார். அவர் வீட்டிற்கு சென்ற பார்த்த போது அழகான குழந்தையை அவர் மனைவி பெற்று எடுத்து இருந்தார். அப்போது எல்லோரும் வலி ஏதுமில்லாமல் குழந்தை பிறந்த்தை எண்ணி ஆச்சிரியப்பட்டனர். அப்போது அவர்கள் வீட்டின் அருகில் உள்ள வீட்டில் இருந்து யாரோ அலரும் சத்தம் கேட்டு அனைவரும் எண்ணவென்று பார்க்க ஒடினார்கள் அப்போது அடுத்த வீட்டு இளைஞன் வலியால் துடித்து கொண்டிருந்தான்.
அதனை அறிந்த அனைத்து பெண்களும் பின் மீண்டும் பிரம்மாவிடம் போய் அந்த வரத்தை வாபஸ் வாங்கி கொண்டார்கள்
டிஸ்கி 1: இந்த கதை மோசம் என்று கண்டம் செய்பவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அந்த கண்டணங்கள் எல்லாம் எங்களுக்கு கதை சொன்ன ஆசிரியருக்கே சேரும்.
மேலும் செக்ஸ்கல்வி பற்றி பள்ளியில் சொல்லிதர வேண்டுமா இல்லையா இன்று வரை விவாதித்து வரும் வேளையில் அப்போதே அது பற்றி மாணவர்களுக்கு இருந்த சந்தேகம் எல்லாம் பற்றி மிக விரிவாக சொன்னவர் அவர். அதற்காக அவருக்கு நன்றி சொல்லதான் வேண்டும்.
டிஸ்கி 2 : நான் அந்த பள்ளியில் படித்தது 5 C யில் இருந்து 10 C வரை ,ஆனால் எங்களுக்கு வந்த ஆசிரியர் எல்லாம் இப்போது டிவி சிரியலில் வரும் 7 C ஆசிரியர் ஸ்டாலின் போல அல்ல.. மாணவர்கள் வகுப்பில் இருந்து கட் அடிப்பதை கேள்விபட்டு இருப்பீர்கள் ஆனால் நான் படித்த போது ஆசிரியர்கள்தான் வகுப்புக்கு வராமல் கட்டு அடித்து ஹெட்மாஸ்டருக்கு அடிமை வேலை செய்ய போய்விடுவார்கள்