Home உறவு-காதல் ஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்? உ டலில் இந்த மாற்றம்...

ஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்? உ டலில் இந்த மாற்றம் தென்பட்டால் உடனே கவனிக்க வேண்டுமாம்!

8567

எங்க பக்கத்து வீட்டு குட்டி பாப்பாவுக்கு 9 வயது தான் இருக்கும். அதற்குள் வயதுக்கு வந்துவிட்டதாக சொல்லி, சீர் வைத்து, திருவிழா போல அமர்க்களமாக கொண்டாடப்பட்டது. பாவம் அந்த பிள்ளை, உடலில் என்ன மாற்றம் நடக்கிறது என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத வயதில் பூப்பெய்தி விட்டாள். அவளுடைய குடும்பத்தாருக்கும் அறிவில்லை. சில வருடங்கள் கழித்து ஒரு புரிதல் வந்த பிறகாவது சீர் வைத்திருக்கலாம். சின்ன பிள்ளை என்று பார்க்காமல், உறவினர்களை அழைத்து சடங்குகள் செய்யும் போது, அவளுடைய முகத்தில் பய உணர்வைத்தான் என்னால் காண முடிந்தது.

ஒருமுறை வெளிப்படையாகவே அவங்க வீட்டில் கேட்டுவிட்டேன். ஏன் இப்படி திடுதொப்புன்னு எல்லாம்? இவ்வளோ அவசரம் எதுக்கு? என்று கேட்டதற்கு, நாங்களும் இந்த வயதில் அவள் வயதுக்கு வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. சின்ன வயசு என்பதால், எங்களுக்கும் கொஞ்சம் பதற்றம் தான். இருந்தாலும் இப்பவே சீர் வைத்து முடித்துவிட்டால், ஒரு பாரம் குறையும் என்றனர். அவங்க சொல்கின்ற மாதிரி, ஒரு பெண் திடீரென எல்லாம் வயதுக்கு வர மாட்டாள். பூப்பெய்துவதற்கு முன்னர் சில அறிகுறிகள், உடலில் தென்பட ஆரம்பிக்கும்.

பொதுவாக பெண்ணுக்கு பத்தில் இருந்து, 14 வயதுக்குள் பருவமடைதல் நிகழ்வு நடக்கும். எங்க பக்கத்து வீட்டு பாப்பாவை போல, ஒரு சில பெண்களுக்கு 8 வயதில் கூட நடக்கலாம். அந்த வயதுக்கும் கீழ் பருவமடையும் அறிகுறி தென்பட்டால், உடனே பரிசோதனை செய்து பார்த்துக்கொள்வது அவசியம். முதலில் ஒரு பெண் பருவமடையப்போகிறாள் என்பதை, மா ர்பக வளர்ச்சி காட்டிக்கொடுக்கும். அதற்கு முன்னர் வரைக்கும், ஆண்களைப் போல இருந்த மா ர்பக பகுதி, படிப்படியாக வளர்ச்சி காண ஆரம்பிக்கும்.

அக்குள் பகுதிகளிலும், அ ந்தரங்க உ றுப்பு பகுதிகளிலும் முடி வளர ஆரம்பிக்கும். ஒரு சில பெண்களுக்கு மட்டும், முகத்திலும், நெற்றியிலும், முதுகிலும் பருக்கள் வரலாம். இந்த அறிகுறிகள் எல்லாம் காட்டிய பிறகே, உ திரப்போக்கு வர ஆரம்பிக்கும். மா தவிலக்கு வந்த உடனே, பெண்ணின் உயரம் அபிரிவிதமாக இருக்கும். அதுவரையில் ஆண் குழந்தைக்கு நிகராக இருந்த பெண்ணின் உயரம், பூப்பெய்தி மூன்று வருடங்களுக்குள் அதிகபட்ச நிலையை எட்டிவிடும்.
age function women

7 வயதுக்கு குறைவாக பூப்பெய்தும் அறிகுறி தென்பட்டாலும், 16 வயதுக்கு மேல் பூப்பெய்தாத அறிகுறி தென்பட்டாலும் உடனே பரிசோதனை செய்துகொள்வது அவசியம். விளையாட்டு துறையில் உள்ள பெண்களுக்கு மட்டும், கொஞ்சம் தள்ளிப்போகலாம். இன்றைக்கு உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, இளவயது மன அழுத்தம் காரணமாக பத்து வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதை காண முடிகிறது. ஒரு பெண்ணுக்குள் பெண்மை மலர்வதன் முதல் அறிகுறியே, பூப்பெய்துவது தான் என்பதால், அந்த நிகழ்வு அவளது உடல் மற்றும் மனதில் மிகப் பெரிய மாற்றங்களை உண்டாக்ககூடியது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.