Home சூடான செய்திகள் “ஒரு நாள்” செக்ஸ் உறவு குறித்து ஆண்களும் பெண்களும் நினைப்பது என்ன?

“ஒரு நாள்” செக்ஸ் உறவு குறித்து ஆண்களும் பெண்களும் நினைப்பது என்ன?

61

images (3)ஆண் மீது பெண்ணுக்கு நம்பிக்கை வந்து திருமணம் செய்து பின் செக்ஸ் உறவு கொள்வதும், சில நேரங்களில் காதலில் விழுந்த பெண்கள் தன் காதலன் மீது அளவு கடந்த நம்பிக்கையின் பால் காதலனுடன் செக்ஸ் உறவு கொள்கிறார்கள், சிலர் கள்ளக்காதலில் விழுகிறார்கள்.

மேற்கூறிய அனைத்துமே நீண்ட கால செக்ஸ் உறவுகளாகும், ஒரே ஒரு நாள் அல்லது மிகக்குறுகிய கால செக்ஸ் உறவுகள் ஒன் டே செக்ஸ் என்றும், செக்ஸ் வித் ஸ்ட்ரேஞ்சர் என்றும் கூறப்படும்.

இந்த “ஒரு நாள்” மட்டும் கொஞ்சிக் குலாவி உடலுறவு கொள்ளும் குறுகிய கால உறவுகளைக் குறித்து ஆண்களும் பெண்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த ஆராய்ச்சியில் இறங்கியது டர்காம் பல்கலைக்கழகம்.

இந்த ஒரு நாள் செக்ஸ் உறவை அனுபவத்த‌ பெண்கள் பெரும்பாலும் குற்ற உணர்வில் இருப்பதாகவும், மேலும் இனிமேல் இது போன்ற ஒரு நாள் செக்ஸ் உறவே வேண்டாம் என எல்லாம் முடிந்து மறு நாள் காலையில் தான் அவர்கள் சிந்திப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஒரு நாள் செக்ஸ் உறவை அனுபவித்த ஆண்களில் 23% மற்றும் பெண்களில் 58% விழுக்காட்டினரும் இந்த உறவை அனுபவித்த பின் “அய்யே சீச்சீ” என்று கூறியுள்ளானர்.

சுமார் 1750 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பெண்களின் மன நிலையையும், ஆண்களின் மனநிலையையும் பட்டியலிட்டிருக்கிறது.

பெண்கள் எந்த விதமான ஆண்களை விரும்புகிறார்கள் என்றால் ஆண்கள் 6 பேக் இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் நீண்டகால உறவுப் பிணைப்பையும், அன்பு, கரிசனம் மற்றும் தன்னை கவனித்து கொள்ளும் நல்ல துணையையே பெண்கள் விரும்புகின்றனர். பெண்களுக்கு அழகான ஆண்கள் இரண்டாம் பட்சம் தான்.

இதற்கு மாறாக ஆண்கள் “அழகான” பெண்களையே விரும்புவதை ஆய்வு உறுதிசெய்துள்ளது.

இந்த ஒரு நாள் செக்ஸ் உறவுக்கு தாங்கள் பொறுப்பாளி இல்லை என்றும் தாங்கள் ஆண்களால் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும், தாங்கள் நினைத்ததை விட மோசமானதாகவே இந்த அனுபவம் இருப்பதாகவும் பல பெண்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள், ஆனால் ஆண்களோ இதற்கு நேர்மாறாக தனக்குக் கிடைத்த ஒரு நாள் செக்ஸ் பார்ட்னர் அழகாய் இல்லை என்றே வருத்தம் தெரிவித்தார்களாம்.