ஒருமுறை உ றவு கொண்டாலே கர்ப்பம் தரித்து விடுமா என்ற சந்தேகம் காலம் காலமாக உள்ளது. ஆனால் தெளிவான பதில் தான் இன்னும் கிடைத்த பாடில்லை. சரி இப்போது எதற்கு இந்த டாப்பிக்? விஷயம் இருக்கு! நண்பர் ஒருவர் தனது அத்தை பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்தார். ஒருவழியாக இருவருக்கும் திருமணம் நிச்சயம் நடந்தாயிற்று. ஆனால் திருமணம் நடப்பதற்குள் இருவரும் அவசரப்பட்டு விட்டார்கள் போல. நண்பர் அரசல் புரசலாக இதனை பகிர்ந்து கொண்டார்.
திருமணம் நடக்க ஆறுமாதமே உள்ளதால், கரு ஏதாவது உருவாகி விடுமோ என இருவரும் பயந்துள்ளனர். பிறகு இது குறித்து கூகுளில் தேடிய பின்னர், கிடைத்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
கருமுட்டை தயாரான நாள் மற்றும் ஆண் விந்தணுவின் வீரியம் இவற்றை எல்லாம் சார்ந்து தான் குழந்தை உருவாக்கம் இருக்கும். பெண்ணின் கருமுட்டையில் எந்த பாதிப்பும் இல்லையெனில் கருமுட்டை உருவான மூன்று அல்லது ஏழாவது நாளில் உறவு கொண்டால் 50 முதல் 80 சதவீதம் கரு உருவாக வாய்ப்பு உண்டு.
பெரும்பாலான நேரங்களில் கரு உருவாகாது என கூறுவதற்கே வாய்ப்புகள் அதிகம். ஆனால் விந்து வீரியமாக இருந்து, கருமுட்டையும் ரெடியாக இருந்தால், கரு உருவாவதையும் ஊர் நம்மை கழுவி ஊற்றுவதையும் யாராலும் தடுக்க முடியாது.