ஆண்களை விட பெண்கள் பொறுமைசாலி என்று சொல்வார்கள். ஒரு கட்டத்தில் பெண்களின் பழக்கங்கள் ஆண்களின் பொறுமையை சோதித்துவிடும். அப்படி ஆண்களின் மண்டையை பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு என்ன தான் பெண்கள் செய்கின்றனர்?
• பல பெண்கள் ஒரு சின்ன அழகு சாதன கடையையே தங்கள் பைகளில் வைத்திருப்பார்கள். ஒரு பார்டிக்கு செல்லும் போது, வீட்டிலேயே நல்ல மேக்-கப் போட்டு விட்டு தான் பெண்கள் கிளம்புவார்கள். ஒரு 15 நிமிடம் காரில் பயணம் மேற்கொண்ட பிறகு, பார்ட்டி நடக்கும் வளாகத்திற்குள் நுழையும் முன் அங்கே இங்கே என்று மறுபடியும் தங்கள் முகத்தினை சரிசெய்து கொள்வார்கள்.
இந்த தருணம் தான் ஆண்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். வீட்டில் தான் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மேக்-கப் போட்டு கொண்டார்களே, பின் ஏன் மறுபடியும் இதை செய்கிறார்கள் என்ற விடை தெரியாத கேள்வியை எழுப்பும்.
• நான் குண்டாக இருக்கிறேனா? என்று கேட்பதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கின்றனர் பெண்கள். தங்கள் உடல் எடை மீதும், அழகின் மீதும், அதிக கவனம் இருப்பது வாஸ்தவம் தான். ஆனால் தங்களின் ஆழ் மனது கூறிக் கொண்டே இருப்பதால், இக்கேள்வியை ஒரு ஆணிடம் பல முறை கேட்க முற்படுவர். ஆகவே அடுத்த முறை உங்களிடம் இந்த கேள்வியை கேட்கும் போது, அது அவர்களிடம் நன்கு பதியும் படியான பதிலை கூறுங்கள்.
• அனைத்து பெண்களும் இதனை கண்டிப்பாக செய்வார்கள். ஒரு பார்ட்டிக்கு செல்லும் முன்பு, தங்கள் அலமாரியில் இருந்து அனைத்து ஆடைகளையும் போட்டு பார்த்து விட்டு, எதுவும் சரியில்லை என்று கூறி விட்டு, உடனடியாக புதிய ஆடை வாங்க முடிவு செய்வார்கள். இரண்டு செட் ஆடைகளை வைத்து, வாரம் முழுவதும் சமாளிக்கும் ஆண்களுக்கு, இந்த விஷயம் ஆச்சரியமாக தான் இருக்கும்.
• கண்டிப்பாக வெளியில் செல்லும் போது, பெண்கள் ஹேன்ட் பேக் வைத்திருக்க வேண்டும். ஆனால் தாஜ் மகாலையே வைக்கும் அளவிற்கு அவ்வளவு பெரிய பையை எதற்காக எடுத்துச் செல்ல எண்டும்?
• முகம், தலைமுடி, உடல் போன்றவைகளுக்கு க்ரீம் பயன்படுத்துவது என்பது ஒரு ரகம். ஆனால் பாதம், கால் விரல்கள், நகங்கள் என ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனித் தனியாக க்ரீம் வாங்கும் பழக்கம் பெண்களிடம் ஏன் இருக்கிறது என்பது ஆண்களுக்கு புரிவதில்லை. நகமும் விரல்களும் உடம்பில் உள்ள பகுதிகள் தான். பின் எதற்காக தனித்தனி க்ரீம் தேவை என்பது தான் ஆண்களின் விடை தெரியாத கேள்வியாகும்.
• பல பெண்களுக்கு தங்கள் பொருட்களை சுத்தப்படுத்தி, அதை சீரமைப்பது என்பது ஒரு பொழுது போக்காக உள்ளது. ஆனால் அதோடு நின்றால் பரவாயில்லை. சுத்தமான கண்ணாடி மேலும் சுத்தமாகும் வரை, குஷன்களெல்லாம் நல்ல பார்வையுடன் வைக்கப்படும் வரை; இப்படி நுணுக்கமாக சீரமைக்கும் வரை அவர்கள் ஓய்வதில்லை.