வறுமை நோயால் பீடிக்கப்பட்டவன், பொறhமைக் குணம் இல்லாதவனும்,. அழகே இல்லாத அவலட்சணமானவனும், அழுக்கோது கூடிய உடலை உடையவனும், தன் மனைவி, நல்ல ஆடை அணிந்த போதும், உடலில் சுண்டி இழுக்கும் வாசனைத்திரவியங்களைப் பு{சிக் கொள்ளும் போதும், கண்ணைக் கவரும் வண்ண வண்ண ஆடைகள் அணிந்த போது கோபித்துக்கொள்பவனும், மனைவியி;டம் வாய்க்குவந்தபடி பொய் சொல்பவனும், அவள் அறியும் படி வேறு ஒரு பெண்ணுடன் கூடி வாழ்பவனும், பெண்களிடத்தில் விருப்பம் இல்லாதவனும், ஆகிய இந்தக் குணங்களை உடைய ஆண்களைப் பெண்கள் விரும்பிச் சென்று கூடுதல் கூடாது என்கிறது காமசூத்திரம்.
அதே போல், எத்தகைய பெண்களிடம் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதையும் அது விhpவாக எடுத்துரைக்கிறது. அது எத்தகைய பெண்கள் எனப் பார்க்கலாமா…..?
எப்போதும் தனத இஷ்டப்படியே நடப்பவளும், தாய் வீட்டில் அடிக்கடி போய் இருந்து கொள்ள ஆசைப்படுகிறவளும், தனியாகச்சென்று வேடிக்கை பார்ப்பதில், திருவிழாக்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவளும், தன்னோடு சேர விரும்பும் ஆண்களுக்கு மத்தியில் எப்போதும் வாசம் செய்ய விருப்பம் கொண்டவளும்., தன் மனதுக்குப்பிடித்த கள்ளக்காதனனுடன், வெளியூhpல் தங்கி வருபவளும், தன்னை விட வயது மூத்தவனுக்கு வாழ்க்கைப்பட்டு, அதனால் காமஇச்சை தணியாமல் தவிப்பளும், அடுத்த ஆண்களைப்பற்றியே விசாhpத்து அவர்களையே எப்போதும் மனதில் எண்ணிக்கொண்டிருப்பவளும், ஆகிய இந்தக்குணங்களை உடைய பெண்களை ஆண்கள் எந்தக் காரணத்தைக்கொண்டும் சேரக்கூடாது என எச்சாpக்கிறது காமசூத்திரம்.
உள்ளத்தில் உண்மையான அன்பு கொண்ட பெண்களை எப்படி அறிந்து கொள்வது…? அதற்கும் சில அறிகுறிகளைச் சொல்லி இருக்கிறது காமசூத்திரம். அவை…
தன் மனதுக்குப்பிடித்த காதலன் தனக்கு அருகில் இருந்தும் பார்க்காமல் இருந்தால், அவனையே அடிக்கடி, உற்றுப்பார்த்து, தன் மீது ஒரு முறையாவது காதல் பார்வை வீச மாட்டானா என ஏங்குவாள். அடிக்கடி புன்னகை செய்து, தனது உள்ளத்தில் உள்ள விருப்பத்தை கண் ஜhடையாலே எடுத்துச் சொல்வாள். அடிக்கடி அவனை மனதில் எண்ணி ஏங்கி, அதன் காரணமாக அடிக்கடி ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொள்வாள். யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் அவனை நினைத்து அருகில் இருக்கும் கம்பங்களைக் கட்டிப்பிடித்துக்கொள்வாள். அவனை நினைத்து, அருகில் இருக்கும் குழந்தையை விருப்பத்தோடு அள்ளி அணைத்து, வாயோடு வாயாக முத்த மழை பொழிவாள். பிறhpடத்தில் பேசுவது போல, அருகில் இருக்கும் தன் காதலனுக்கு சில வார்த்தைகளைப் பேசுவாள். தன்னைவிட்டு நெடுந்தூரம் அவன் செல்ல இருந்தால், போக வேண்டாம் எனத் தடுத்து கெஞ்சுவாள்.
தன்னால் உங்களை விட்டு ஒரு கணம் கூடப் பிhpந்திருக்க முடியாது எனச் சொல்வாள். அவன் மீது இருக்கும் பேரன்பினால், அவனது தொழிலைப்பற்றி அவனது நண்பர்களிடத்தில் புகழ்ந்து பேசுவாள்., அவன் பேசும் சொற்களை மிகுந்த வாஞ்சையோடு அருகில் இருந்து கூர்ந்து கேட்பாள். அவனைக் கண்ட மாத்திரத்தில், நாணம் பொங்;கி நிற்பாள். இத்தகைய அறிகுறிகளைக் காட்டும் பெண்கள், உள்ளத்தில் தன் மீது உண்மையான அன்பு கொண்டிருக்கிறhள் என ஆண் புhpந்து கொள்ள வேண்டும் என்கிறது காமசூத்திரம்….*