கேள்வி – எனக்கு 25 வயதாகிறது. எனது காதலனுக்கு பால்வினை சரும நோய்
(ஹெர்பிஸ்) உள்ளது. இது என்ன நோய்? அவரை திருமணம் செய்வது சரியா? இது
எனது பாலுறவு வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? நாங்கள் குழந்தை
பெற்றுக் கொள்ளலாமா? திருமண வாழ்க்கை சாதாரணமான ஒன்றாக இருக்குமா? நான்
முத்தமிடலாமா? நான் எனது பெற்றோரிடம் சொல்லலாமா?
பதில் – பிறப்புறுப்பில் ஏற்படும் ஹெர்பிஸ் தொற்றுநோயுள்ள ஒருவருடன்
உடலுறவு கொள்வதால் ஏற்படுவதாகும். இதற்கு வைத்தியம் கிடையாது. ஆனால் அதனை
தடுக்க மருந்துகள் உள்ளன. இது கொப்புளங்கள் இருக்கும்போது தொற்றக்
கூடியது. நீங்கள் முடிவெடுக்கும் முன்பாக ஒரு சரும நிபுணர் மற்றும் பெண்
மருத்துவரை பார்ப்பது நல்லது என்று அறிவுறுத்துவேன். எனவே, முத்தமிடுவது
உட்பட அவருடன் உடலுறவு கொள்வது நல்லதில்லை. உங்களால் சாதாரணமான தாம்பத்ய
வாழ்க்கை வாழ முடியாது. குழந்தை பெற்றுக் கொள்வதும் அபாயமானதே. நீங்கள்
கண்டிப்பாக இது பற்றி உங்கள் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். அவர் உங்களிடம்
வெளிப்படையாக இருப்பதால், நீங்கள் நல்ல நண்பர்களாக இருந்து விட்டுப்போவதே
சிறந்தது என்பேன்.
கேள்வி: 30 வயதிற்கு மேல் ஆண்களின் காதல், காமம் குறித்தல் மாறுவது இயல்பா அல்லது எனக்கு மட்டும் அப்படி தோணுதா?
கேட்டவர் என் தம்பிகளில் ஒருவர்
பதில்:
உலகில் உள்ள எல்லா உயிர்களின் அடிப்படை தேவை உணவியல், உறவியல்(இனபெருக்கம்) இதுல ஏன் இயல் வந்ததுன்னா அவற்றை பெற ஒவ்வொரு உயிரும் தனிதன்மை பெற்றுள்ளன. அது குறித்து எழுதினால் என்சைக்ளோபிடியா புத்தகத்தை விட பெரிதாக எழுதனும். அவ்ளோ விசயங்கள் இருக்கு அதில்
மனிதர்களில் பிற உயிர்களை விட ஒரு படி மேம்பட்டவர்கள். அவர்கள் சிந்தனை பொருளியல், கருத்தியல் சார்ந்தது. பொருளியல் என்பது பொருள் ஈட்டல், அதை சேமித்தல், அதை காத்தல். இதில் உணவுக்கான தேவையும் அடக்கம். கருத்தியல் என்பது சிந்தனை, செயல்(ஆட்டிடியூட்) ஆளுமை(கேரக்டர்) சார்ந்தது. இதை ஏன் சொன்னேன்னு கடைசியில் புரியும்.
காதல், காமம் இரண்டிலும் பால் வேற்றுமை இன்றி இருவருக்கும் ஒரே மாதிரியான உணர்வுகள் தான் ஏற்படும். பருவம் ஏய்திய வயது முதல் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் எதிர்பால் ஈர்ப்பு அதிகமாக இருந்தாலும் பயமும் அதிகமாக இருக்கும். அதன் பின் 17 அல்லது 18 வயதிலிருந்து இனபெருக்கத்திற்கான பருவம் தொடக்கம்
அதிர்ஷ்டவசமாக இந்திய பெண்கள் 99% பேர்களுக்கு இந்த பருவத்தில் திருமணம் நடந்துவிடுகிறது. 55 ஆண்டுகளுக்கு முன் இந்திய பெண்களின் சராசரி திருமண வயது 16 தான். ஆனால் இப்போது இருப்பதை விட பிரசவ கால இறப்புகள் அப்பொழுது அதிகம். உடல் தகுதியும், மன முதிர்வும் திருமணத்திற்கும், பிரசவதிற்கும் அவசியம் ஆகிறது.
திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறக்கும் வரை சிக்கலில்லாமல் போகும் குடும்ப வாழ்க்கை, குழந்தைக்கு பின் தடுமாறும், ஒரு இடத்தில் இருவர் இருந்தாலே அங்கே அரசியல் உண்டு என்பது பொது விதி. மூன்றாம் நபராக வரும் குழந்தையை களிமண்ணாக பாவித்து ஒருவர் பிள்ளையார் பிடிக்க ஆசைப்படுவார், மற்றவர் கண்ணுக்கு அது குரங்காக தெரியும். இங்கே தேவை எது நல்லது என கருத்தியல் ரீதியான உரையாடல் ஆனால் பெண்களின் பிடிவாதமே வெல்லும். ஆண்களின் அனுபவம் பல தோல்வியில் முடிவதால் குழந்தைகள் குறித்தான முடிவுகளை பெண்கள் எடுப்பதில் பிடிவாதமாக இருப்பார்கள்.
பொருள் ஈட்டியாகவேண்டிய கட்டாயம், மற்றொரு துணையின் வேலைபளு இருவருக்குமான உறவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் இடைவெளி ஏற்படும். இவ்விசயத்தில் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் இருந்து கோடீஸ்வரகள் வரை விதிவிலக்கல்ல. ஒரு தரப்பின் அதிக எதிர்பார்ப்பும், ஒரு தரப்பின் அலட்சியமும் பெரும் முரணை இருவருக்கும் ஏற்படுத்தி இடைவெளியை அதிகமாக்கும். இது போக கருத்தியல் முரண்கள், ரசனை சார்ந்த வேறுபாடுகள் போன்ற உளவியல் சிக்கல்கள் நிறைய
உடலியல் இங்கே முக்கிய பிரச்சனை. பண்டைய ஆளுமைகள் மனித வாழ்வில் கலவியின் முக்கியத்துவம் கருதி கலவிகென்று கோவிலே கட்டினார்கள், பின் வந்த ஆணாதிக்க சமூகம் பெண்களுக்கு செக்ஸ் புரிதல் ஏற்படுவதை விரும்பவில்லை. பயப்பட்டார்கள் என்று கூட சொல்லலாம். செக்ஸ் என்பதே கெட்டவார்த்தை, கெட்ட செயல் போல் திணிக்கபட்டதால் பெண் உறுப்புகளை தொடுவதை கூட அருவருப்பாக எண்ண ஆரம்பித்தாள்
செக்ஸ் என்பது ஒரு அனுபவம், அந்த அனுபவம் ஒரே மாதிரி இருந்தால் சலிப்பு ஏற்படுவது இயல்பு இது இரு பாலருக்கும் பொருந்தும் தான். ஆனால் ஆணோ செக்ஸை தூக்கமாத்திரை போல் பயன்படுத்திகிறான். எதிர் தரப்பின் தேவை குறித்தான எந்த உணர்வும் இல்லை. அவளுக்கும் வெளிப்படையாக கேட்க தயக்கம். இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் என்று அவள் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குவான் என்ற பயம். பிரி மெச்சூர் இஜாக்குலேசன் பெரும்பாலும் மனரீதியான பிரச்சனை தான். இருவருக்குள் இருக்கும் புரிதலால் அதை சரி செய்ய முடியும்.
உளவியல், உடலியல் இரு தேவைகளும் 30 வயதிற்கு மேல் முதிர்ச்சி அடைந்த நிலையில் இருக்கும் தன் கருத்தியிலில் ஒத்து போகும் ஆளுமைகள் தனி கவனம் பெறுவார்கள். அவர்களுக்குள் எந்த வித கமீட்மெண்டுகளும் இருக்காது. நீ இதை தான் செய்யனும், இப்படி தான் செய்யனும் என்ற அதிகாரம் இருக்காது. துணைக்கு பொருள் ஈட்டு தனியாக மெனக்கெட வேண்டியிருக்காது. எல்லாத்தையும் விட முக்கியம் செக்ஸ் சுதந்திரம் இருக்கும். கேட்டது கிடைக்கும்
சரியான நேரத்தில் தேர்தெடுக்கும் சரியான துனையை தான் சமூகம் கள்ளகாதல் என அழைக்கும்.
செக்ஸ் சிந்தனைகளை மேற்கொள்வது எப்படி?
இன்றைய அதிவேக மொபைல் உலகில் அனைத்தும் விரல்நுனியில் இருக்கையில், இதுபோன்ற சில கேள்விகளுக்கான விடைகாணுவதில் மனிதன் என்றுமே தடுமாறத்தான் செய்கிறான். இன்று இணைய உலகில் நாம் விரும்பாமலேயே தவறான வலைதளங்கள் மற்றும் வீடியோக்கள் நம் பார்வைக்கு வரும் சூழலில் பல விதங்களில் நம் பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டு அதற்கான வடிகால் என்ன என்று அனேகர் யோசித்து தவறான முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். மற்றொரு பக்கத்தில் செக்ஸ் என்றாலே அது தப்பான காரியம் என்ற தவறான சிந்தனையில் அதைப் பற்றி திறந்த மனதுடன் பேசுவதையே தவிர்த்துவிடுகின்றனர்.
பாலியல் உணர்வுகள் மனிதனுக்கு நல்ல நோக்கத்தில் இறைவனால் கொடுக்கப்பட்டது. அதை முறையாக அணுகும்போது அது மனுக்குலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செக்ஸ் சிந்தனைகள் வருவது இயல்பு என்றாலும் அதை சரியான விதத்தில் அணுகுவதிலேயே முதிர்ச்சி வெளிப்படும்.
பரிசுத்த வேதாகமத்தில் யோசேப்பு என்ற வாலிபன் தன் எஜமானனின் மனைவியால் தவறான பாலியல் உறவுக்கு வற்புறுத்தப் பட்ட போது “என் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி?” என்று சொல்லி அவ்வாலிபன் விலகி ஓடினான். ஆம் தவறான உறவுகள் தனிமனிதனுக்கு மட்டுமல்ல, அவனைப் படைத்த இறைவனுக்கும் எதிரான செயலே. பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓடுவதே மிகவும் ஞானமான செயல். ஆனால் தொடர்ந்து அப்படிப் பட்ட சூழ்நிலைகளின் மத்தியில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், தண்ணீர் மேல் தாமரையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
என் தலைக்கு மேல் பறவை பறந்து செல்வதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் என் தலையில் அந்த பறவை கூடு கட்டுவதை என்னால் தடுக்க முடியும் என்று ஒருவர் சொன்னது போல, நீங்கள் நினைத்தால், பாலியல் சிந்தனை உங்களை ஆக்ரமித்துக் கொள்ளாதபடி உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். கொஞ்சம் இடம் கொடுத்தால், அது முழுமையாக உங்களை ஆட்கொண்டுவிடும் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் முன்னுரிமைப் பட்டியல்களில் தெளிவாக இருங்கள்.
சுய புணர்ச்சி செய்யலாமா?
கேள்வி: நான் அடிக்கடி பாலியல் உணர்வுகளால் தூண்டப்பட்டு சுயபுணர்ச்சி (Masturbation) செய்கிறேன். இது சரியா? இதனால் பாதிப்புகள் உண்டாகுமா?
ஆசையை அடக்க முடியாமல், அதற்கு வடிகாலாக சுய புணர்ச்சி செய்வதை அனேகர் ஆதரிக்கின்றனர். சில மருத்துவர்களும் கூட இதில் தவறேதும் இல்லை என்கின்றனர். சுய புணர்ச்சி செய்வதால் பெரிய பாவம் செய்வதிலிருந்து அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள் என்று கூட சிலர் சொல்கின்றனர்.
பாலியல் உணர்வுகள் என்பது மனிதர் எல்லாருக்கும் உண்டு. அதின் அளவு வித்தியாசப்படலாம். நம் சரீரத்திற்கு பசி ஏற்படுவதைப் போலவே பாலியல் உணர்வுகளும் உண்டாகிறது. பசிக்கிறது என்பதற்காக நாம் கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிடுவதில்லை. பாலியல் உணர்வைப் பொறுத்த வரையிலும் கூட அதே அணுகுமுறையைக் கடை பிடித்தலே சிறந்தது ஆகும்.
சுய புணர்ச்சி செய்பவர்கள் பெரும்பாலும் இனம் புரியாத ஒரு வித குற்ற உணர்வுடனேயே இருக்கின்றனர். ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதே பாவம் என்று இயேசு சொன்னார். அனேகர் சுய புணர்ச்சி செய்கையில் Virtual உலகில் யாரையோ நினைத்துக் கொண்டுதான் அச்செயலைச் செய்கின்றனர். அல்லது அப்படிப் பட்ட வீடியோ, படங்கள் அல்லது கதைகள் ஏதாகிலும் ஒன்றால் தூண்டப்பட்டு இயங்குகின்றனர். ஆகவேதான் சுய புணர்ச்சி செய்வது தவறு என்று சொல்கிறேன்.
இன்று ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, சுய புணர்ச்சி செய்யாதவர்கள் யார்? என்று சிலர் நினைக்கலாம். நாம் கண்டதையும் சாப்பிட்டால் அதன் பின்விளைவுகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும். அதேபோலவே நம் பாலியல் உணர்வுகளுக்கு சரியான ஆகாரத்தை, தகுதியான ஆகாரத்தைக் கொடுத்தால் மட்டுமே நம் வாழ்க்கை இன்புறும்.
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆனால் எல்லாம் தகுதியாயிராது என்ற பைபிள் வாசகத்தை மனதில் இருத்துவோம். சுய புணர்ச்சி போன்ற பழக்க வழக்கங்கள் ஒரு வித அடிமைத்தனத்திற்குள்ளாக நடத்தக் கூடியதாக இருக்கிறது. அதைச் செய்தால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்து, செய்து முடித்த பின் குற்ற உணர்வுடன் இருப்பதைக் காட்டிலும், செய்யாமல் இருப்பதே மேல்.
நான் பல நாட்களாக இதைச் செய்துவருகிறேன். திடீரென்று எப்படி நிறுத்துவது என்ற கேள்வி எழலாம். பொதுவாக பாலியல் உணர்வு தானாக எவருக்கும் உண்டாவதில்லை. நம் சிந்தனைகளிலோ அல்லது நாம் எதையாவது பார்ப்பதினாலோ அல்லது வாசிப்பதினாலேயே உண்டாகிறது. நாம் மனதில் பாலியல் உணர்வு உண்டாக்கக் கூடிய செயல்களில் கவனம் செலுத்தாமல், நம் வாழ்க்கைக்கு பயனுள்ள காரியங்களில் கவனம் செலுத்தலாம்.
An empty mind is devil’s workshop என்று சொல்வார்கள் அல்லவா. ஆகவே நம் மனதை தகுதியான காரியங்களினால் நிரப்புவோம். பைபிள் வசனங்களினாலும் பக்திக்குரிய காரியங்களினாலும் நிரப்புங்கள் என்று சொல்ல மாட்டேன். மாறாக அத்துடன் இந்த உலகில் நாம் அனுபவிப்பதற்கு எத்தனையோ விசயங்கள் உள்ளன. நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். உங்கள் சரீர புத்துணர்ச்சிக்காக எதாகிலும் கால்ப்பந்து, வாலிபால் போன்ற எதாகிலும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். இவைகளைச் செய்யும்போது உங்கள் வாழ்க்கை சரியான திசையில் செல்வதை நீங்களே கண்டு கொள்வீர்கள்.