Home இரகசியகேள்வி-பதில் எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்!

எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்!

86

hqdefaultsexstudy,antharankam antharankam,samaiyal satham,sex kelvikal,amilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com,How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,,antharangam,,antharanka thakaval,studantsexy
,sexteacher,antharankakathal,doctor,நான் என் பெற்றோருக்கு கடைசிப் பெண்; பிறப்பிலேயே கர்ப்பப்பை இல்லாமல் குறையோடு பிறந்தேன். ஒரு சமயம் சிகிச்சைக்காக சென்றிருந்தபோது, ஸ்கேன் மூலமாக இந்த விஷயம் தெரிய வந்தது. மற்ற‍ பெண்களைப்போல் எனக்கு பூப்பெய்தல் நிகழாது, ஆனால் தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபடலாம் என்று… என் குறைபாட்டை நினைத்து அதிர்ச்சி ஏற்பட்டாலும், வாழ ஒரு வழி இருக்கிறதே என நினைத்து, மனதை தேற்றிக்கொண்டேன்.
ஆனால், இவ்விஷயத்தை தெரிந்து கொண்ட என் உறவினர்கள், என்னை உதாசினப்படுத்தி பேசுவர். அப்போதெல்லாம் என் அண்ணன் தான் என் மனதை பக்குவப்படுத்துவார். பட்டப்படிப்பு முடிந்து அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில், என் குறைக்கு ஏற்றாற்போல், மனைவியை இழந்த, குழந்தையுடன் இருக்கும் ஒரு வரன் வந்தது; திருமணமும் நடந்தது. என் கணவர், என் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் உள்ளவர்; சந்தோஷமாகவே வாழ்கிறேன். அவருடைய குழந்தையாக இருந்தவள், இப்போது, என் குழந்தையாகிவிட்டாள். அவள் என்னை , ‘அம்மா’ என்று, அன்புடன் அழைப்பாள். நாங்கள் இருவரும் பாசமாகத்தான் இருக்கிறோம்.

ஆனால், என் கணவர் வீட்டினரைத் தவிர, அவருடைய உறவினர்களுக்கு என் குறை தெரியாததால், ‘இன்னொரு குழந்தை எப்போது…’ என்றும், ‘என்னதான் இருந்தாலும் நீ, அவளுக்கு வளர்ப்புத் தாய் தான்…’ என்கின்றனர். என் கணவரும், என் குழந்தையும் ஆறுதலாக இருந்தபோதும், ‘ஏன் நாம் மட்டும் இப்படிப் பிறந்தோம்; நம்மாலும் ஒரு குழந்தை பெற முடிந்திருந்தால் இந்த பேச்சுக்கள் வாங்குவோமா…’ என, எண்ணத் தோன்றுகிறது. அம்மா, என் உறவினர்களுக்கும், இந்த உலகத்திற்கும் என் போன்ற நிலையில் உள்ள குழந்தை பெறாதவர்களுக்கும், ‘நச்’சென்று தாய்மையின் புனிதத்தை புரிய வையுங்களம்மா! பெற்றால்தான் பிள்ளையா? அவள் என் தங்கப்பதுமை!

— இப்படிக்கு, அன்பு மகள்.

அன்பு மகளுக்கு,

தாய்மை என்பது பெண்மையின் பெருமைமிகு விஷயம்தான்; ஆனால், அதை விட பெருமையானது எது தெரியுமா. தான் பெற்றெடுக்காத குழந்தைக்கு, மலஜலம் கழுவி, கண், காது, மூக்கு துடைத்து, அது பசிக்கு அழுகிறதா, உடல் உபாதையில் சிணுங்குகிறதா என கண்ணுற்று, பாராட்டி, சீராட்டி வளர்க் கிறாளே… அவள் அந்த பெற்றவளை விட பல மடங்கு உயர்ந்தவள். பசியால் அழுத ஞானசம்பந் தருக்கு, ஞானபால் கொடுத்த அம்பிகைக்கு நிகரானவர்கள்.
அத்தகைய உயர்ந்த இடத்தில் இருக்கும் நீ, மனம் சஞ்சலப்படலாமா? மகளே…திருமணமாகி, கர்ப்பப்பை இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களையும், திருமணத்திற்கே வழியில்லாத பெண்களையும் நினைத்துப்பார்.. அவர்கள் வேதனையை விடவா உன் வேதனை பெரிது? சோதனை குழாய் மூலமாவது ஒரு குழந்தையை பெற்று விடவேண்டும் என்று லட்ச லட்சமாய் செலவழிப்போரும், பத்து ஆண்டு, இருபது ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் சமுதாயத்தின் ஏளன பார்வையால், தங்களுள் ஒடுங்கிப் போகும் தம்பதியினரை ஒப்பிடுகையில், நீ, எத்தனை கொடுத்து வைத்தவள் … உனக்கு கர்ப்பப்பை இல்லாததனால், சினைமுட்டை உற்பத்தி இல்லை; மூன்று நாள் தொந்தரவு இல்லை; கர்ப்பம்தரித்துபடும் பத்து மாத அவதி இல்லை; செத்துப்பிழைக்கும் பிரசவ வேதனை இல்லை; வயிற்றை கிழித்து, குழந்தையை எடுக்கும் சிசேரியன் இல்லை; கர்ப்பப்பை புற்று நோய் வராது; ‘மெனோபாஸ் பீரியடு’ வந்து ஹார்மோன் ஏற்ற, இறக்கத்தால் மனதாலும், உடலாலும் அவதியுறமாட்டாய்.
இத்தனை கஷ்டங்களையும், அனுபவிக்காமல், தங்க விக்ரகம் போன்ற ஒரு குழந்தைக்கு நீ தாய் ஆகி இருக்கின்றாய். ஆனால், உனக்கு முன், உன் கணவனை மணந்தவளோ, இத்தனை கஷ்டங்களையும் சுமந்து, தன் உயிரைக் கொடுத்து, உனக்காக ஒரு குழந்தையை பெற்று கொடுத்துவிட்டு, அதன் மழலை இன்பத்தை அனுபவிக்காமல் போய் சேர்ந்துவிட்டாள். உண்மையில் அவள் அல்லவா அபாக்கி யவாதி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது? அக்குழந்தையை நல்லமுறையில் வளர்த்து, சமுதாயத்திற்குமுன் மாதிரியாக கொண்டு வருவதில் அல்லவா அந்த தாயின், தாய்மையின் சிறப்பு இருக்கிறது! எனக்குத் தெரிந்த செவிலியர் பெண் ஒருத்தி, ஆயிரக்கணக்கான பிரசவங்களுக்கு துணை நின்றவள்.
‘குழந்தையை வெளியில் எடுத்து, தொப்புள் கொடி கத்தரித்து, அசுத்தங்களை சுத்தம் செய்யும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே… அது, வேறு எதிலும் கிடைக்காது…’ என்பார். நீ, உன் பிறவிக்குறையை நினைத்து மருகமருகத்தான் அற்பர்களின் நாக்கிற்கு குஷி ஏற்படும்; மாறாக, ‘இன்னொரு குழந்தை எப்போது ?’ என்று கேட்டால், ‘இதோ என் தங்கக் கட்டி. இவள் ஒன்றே போதும்; இவள் ஆயிரம் குழந்தைகளுக்கு சமமானவள்.’ என்று பெருமை பேசு; மகளே! உனக்கும், உன் கணவனின் குழந்தைக்கும் பூர்வஜென்ம பந்தம் இருப்பதாக நம்பு. பத்து, பதினைந்து ஆண்டுகள் நீ பெறாத பிள்ளையை, தாய்பாசத்தை கொட்டி வளர்த்தால், குழந்தையின் சாயல், உன்னை ஒத்து மாறிவிடும். ‘சித்தி’ என்ற வார்த்தையை தமிழ் சினிமாவும், இலக்கியமும் பொய் புனைவு செய்து, கொடுமைக்காரி என்ற அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன. சித்திகளில் சொக்கத் தங்கங்களும் உண்டு என்பதை உன்னைப் பார்த்து, இந்த உலகம் தெரிந்து கொள்ளட்டும்