Home பெண்கள் உடல் கட்டுப்பாடு எந்த ரிஸ்க்கும் எடுக்காமலே எடையை குறைக்கணுமா?… அப்போ இத பாருங்க…

எந்த ரிஸ்க்கும் எடுக்காமலே எடையை குறைக்கணுமா?… அப்போ இத பாருங்க…

22

உடல்பருமன் என்பது உடலில், ஏராளமான நோய்கள் உண்டாகக் காரணமாக அமைகிறது.

ஆனால் நம்முடைய முன்னோர்கள், இயற்கையைச் சார்ந்து வாழ்ந்ததால், நீரிழிவையும் உடல் பருமனையும் தங்களிடம் நெருங்கவிடவில்லை.

இன்றைய ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, நம் முன்னோர்கள் கடைபிடித்த சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே, உடல்பருமனை எளிமையாகக் குறைக்க முடியும்.

கொதிக்கும் நீரில், 1 ஸ்பூன் சோம்பைப் போட்டு மூடி வைக்கவும். அது நன்கு ஆறியதும் வடிகட்டிக் குடித்து வரவும். இப்படி தொடர்ந்து மூன்று மாதங்களுக்குக் குடித்து வந்தால் உங்கள் எடை குறைந்திருப்பதை உங்களால் உணர முடியும்.

முட்டைகோஸ் உடல்பருமனைக் குறைக்க உதவும். வாரத்துக்கு இரண்டு முறையாவது முட்டைகோஸை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீரகத்தை எண்ணெய் ஏதும் சேர்க்காமல், நன்கு வறுத்து வைத்துக் கொண்டு, அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

பாகற்காயை உப்பு சேர்த்து வேகவைத்து, உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது மிக விரைவாக உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும்.
கேரட்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடை குறையும்.

வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் தேனைச் சேர்த்து, வெறும் வயிற்றில் குடித்து வர உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். சிலர் தேனுடன் எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொள்வதுண்டு.

ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படும் குல்கந்தினை, வெந்நீரில் கலந்து, தினமும் இரண்டு வேளை குடிக்க வேண்டும். இது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படும்.

மூன்று கிராம் அளவுக்கு பட்டை இலவங்கப்பொடியையும் மிளகுப்பொடியையும் சேர்த்து, வெந்நீரில் குடித்தால் உடல் எடை வேகமாகக் குறைவதைக் காணலாம்.

உடல்பருமனைக் குறைக்க தினமும் சப்பாத்தி சாப்பிடுபவர்கள் அதனுடன் புதினா சட்னி சேர்த்துக் கொண்டால், அதன் பலன் இரு மடங்காகும். புதினா டீயும் நல்ல பலனைத் தரும்.