Home பாலியல் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க கூடாது

எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க கூடாது

22

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப் பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத் துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண் டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக் கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தை யின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.
* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொ ண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண் டும். அதாவது பிரச வம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசே ரியனா என்று பார்க்க வேண்டும்.
* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண் ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங் களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண் களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கண க்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்ப தாக மருத்துவர் உத்தரவா தம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.
* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பா தையில் காயங்கள் ஏற்பட் டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.
* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவ னுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.
* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணி ன் உடல்நலம் முற்றிலும் சரி யாகி விட்ட போதிலும், அவளு க்கு உறவில் விருப்பமில்லை எ ன்று தெரிந்தால், அதற்குக் கட்டா யப்படுத்துவது கூ டாது.
* உறவில் ஈடுபடும் போது உடலு றவுப் பாதையில் கடுமை யான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.
* கருச்சிதைவுக்குள்ளானவர்களு ம், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலே யே உறவைத் தொடங்க வேண்டும்.
* மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்கா து என்று பலரும் அந்நாளில் உற வு கொள்ள நினைப்ப துண்டு. ஆ னால் அதை முழுமையாக நம்பு வதற்கில்லை. அந் நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கண வன் -மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய் ப்புகள் அதிகம்.
* பெண் நோய் வாய்ப்பட்டிருந் தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.
* கைக் குழந்தையிருக்கும் போ து உறவில் ஈடுபட்டால் தாய் ப்பால் இல்லாமல் போய் வி டும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கை யே. குழந்தை பிறந்து, குறுகி ய காலத்திலேயே உறவு கொ ண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலே யே அதைத் தவிர்க்கச் சொல் கிறார்கள்.
* பிரசவித்த பெண்கள் தாய்ப் பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண் டாம். ஏதாவதொரு கார ணத்தால் பால் வற்றிவிட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.