எப்போது ஒரு ஆணும் பெண்ணும் பூப்படைகிறார்க ளோ அப்போதே அவர்களது உடல் கொஞ்சம் கொஞ்ச மாக உடலுறவுக்கும்
குழந்தை பெறுதலுக்கும் தயாரா கத் தொடங்குகிறது.
எத்தனை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியா க பல கருத்துகள் இருந்தா லும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு பெண்ணோ அல்லது ஆணோ உடல் ரீதி யாகவும் மன ரீதியாகவும் உறவில் ஈடுபடத் தயாரோ அப்போதே அவர்கள் உறவில் ஈடுபடலாம். ஆனால் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது பெண்கள் இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பெரிய பிரச்சனைகளை அந் தப் பெண்ணுக்கு ஏற்படுத்த லாம்.
அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள், உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் அடைவதால் உடல் மற் றும் உள ரீதியாக கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் சமுதாயத்தால் அப்பெண் ஓர ங்கட்டப்பட்டு அவமானச் சின்னமாகவே கருதப்படுவர். அதனால் இளம் வயதில் உட லுறவையும் அதன்மூலமாக கர்ப்ப ம் அடைவதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 18 வயதிற்கு மேற் பட்ட திருமணம் செய்து கொ ண்டு தனது கணவனுடன் இல்லற வாழ்வில் ஈடுபட யாதொரு தடையுமில்லை. மேலும் திருமணம் ஆகியிரு ந்தாலும் கூட. 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள், உடலு றவில் ஈடப்படக்கூடாது. அப்படி தவறி உறவில் ஈடு படும்போது உரிய பாதுகாப் பு முறைகளை கையாண்டு கர்ப் பமடைவதைத் தவிர்க் க வேண்டும்.
அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வே ண்டும் என்பதிலும் கட்டுப்பாடு இல்லை. எத்தனை வயது வரை அவர்களால் முடியுமோ அத்தனை வயது வரை அவர்கள் உடலுறவில் ஈடுபட முடி யும். ஆனாலும் இளவயதுப் பெண்களை ப்போல வயதான பெண்களும் கர்ப்பம டைவதால் பல பிரச்சனைகள் அவர்களு க்கு உருவாகலாம்.
ஆகவே தங்கள் குடும்பத்திற்குரிய குழந் தைகளை பெ ற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடும்பக் கட்டுப்பாட்டு முறையைக்கடை ப்பிடிக்க வேண்டியது அவசிய மாகும் ஆணோ, பெண்ணோ திருமணதிற்குமுன் உடலுறவி ல் ஈடுபடுவதை தவிர்த்து, ஒழு க்க நெறியுடன்வாழவேண்டும்.
உரிய வயதில் திருமணம் செய்து கொண்டு இனிதான தாம்பத்தியத்தி ல் அதாவது உடலுறவில் ஈடுபட்டு குழந்தை பெற்றால் வளமான ஆரோக்கியமான வாழ்வு உங்களு க்கு கிட்டும்.