தந்தையை கொலை செய்த தாயின் கள்ளக்காதலனின் விபரங்கள் குறித்து பொலிஸாரிடம் விசாரணையின்போது 4 வயது சிறுமி ஒருவர் தெரிவித்துள்ள சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் மேடவாக்கத்தைச் சேர்ந்த அறிவழகன் (35). ராயப்பேட்டையிலுள்ள தியேட்டரில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். உறவுக்கார பெண் சுரேகா (24) என்பவரை மூன்று ஆண்டுகள் காதலித்து அறிவழகன் திருமணம் செய்துள்ளார்.
6 ஆண்டுக்கு முன் இவர்கள் திருமணம் நடந்துள்ளது.
இந்த தம்பதிக்கு சாதனா (4) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்தவாரம் 4 பேர் இவர்கள் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு அறிவழகனை வெளியே இழுத்து சென்று படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
‘கணவரைக் காப்பற்ற முயன்றபோது என்னையும் கையில் வெட்டிவிட்டு, கட்டிபோட்டு விட்டு சென்றனர். அவர்கள் எனது நகையை கொள்ளையடிக்க வந்தவர்கள்’ என மனைவி சுரேகா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது மனைவி சுரேகா மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே அறிவழகன் மகள் சாதனாவிடம் பொலிஸார் வீட்டுக்கு யார் யார் வருவார்கள் என கேட்டனர்.
அப்போது சாதனா “எதிர்வீட்டு அங்கிள் அடிக்கடி வீட்டிற்கு வந்து அம்மாவை பார்ப்பார். பின்னர் அம்மாவை அங்கிள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு செல்வார்” என கூறியுள்ளார்.
இதனால் சுரேகா மீது சந்தேகம் வலுத்தது. அறிவழகன் வீட்டினருகில் வசிக்கும் நபர்கள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது கணபதி (32) என்ற வாலிபர் சம்பவம் நடந்த தினத்தில் இருந்து மாயமாகி இருந்தமை தெரியவந்தது.
பின்னர் பொலிஸார் அவரது செல்போன் எண்ணை வைத்து கணபதியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சுரேகாவுக்கும் கணபதிக்கும் இடையே கடந்த ஓராண்டாக கள்ளக்காதல் இருந்தமை தெரியவந்தது.
கள்ளக்காதல் விவகாரம் அறிவழகனுக்கு தெரிந்ததால் சுரேகாவை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேகா கணவர் அறிவழகனை கொலை செய்ய திட்டம் திட்டி அதன்படி படுகொலை செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து கள்ளக்காதலன் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், அறிவழகன் வீட்டின் எதிரே எங்கள் வீடு என்பதால் நான் அடிக்கடி சுரேகாவை பார்த்து சிரிப்பது வழக்கம்.
அவளும் என்னைப் பார்த்து சிரிப்பாள். பின்னர் நாளடைவில் சுரேகா பண்டிகை நாட்களில் ஏதேனும் சமைத்தால் எங்கள் வீட்டுக்கு கொடுப்பது வழக்கம். அப்போது எனக்கும் தனியாக கொடுப்பாள். இதனால் எனக்கு சுரேகா மீது காதல் வந்தது.
ஒருநாள் எங்கள் வீட்டில் யாரும் இல்லை. அப்போது சுரேகா எங்கள் வீட்டுக்கு வந்தாள். அப்போது நான் மட்டும் தனியாக இருந்தேன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் சுரேகாவிடம் என் காதலை கூறினேன்.
அப்போது எனக்கு திருமணம் ஆகி மகள் உள்ளார் என கூறினாள். அதற்கு நான் உன்னை திருமணம் செய்து கொண்டு மகளையும் என் மகள் போல் வளர்ப்பேன் என கூறினேன்.
அதற்கு எதுவும் பேசாமல் சுரேகா சென்று விட்டார். ஒரு வாரம் என்னை பார்க்காமல் சுரேகா தவிர்த்து வந்தார்.
அறிவழகன் வேலைக்கு சென்றால் நள்ளிரவு 1 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவார் என்பதால் நான் ஒருநாள் இரவு 11 மணிக்கு சுரேகா வீட்டுக்குச் சென்றேன்.
அப்போது கதவை திறந்த சுரேகா நீ ஏன் இங்கு வந்தாய் என்று திட்டினாள். உட னே நான் உன்னை பார்க்க வந்தேன் என கூறினேன். யாராவது பார்த்தால் பிரச்சினையாகும், நீ சென்று விடு என கூறினாள்.
உடனே சுரேகாவை கட்டி அணைத்தேன். அப்போது சுரேகா எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததால் அன்று நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம்.
பின்னர் தினமும் நான் இரவு 11 மணியில் இருந்து 12 மணி வரை சுரேகா வீட்டில் தான் இருப்பேன். இந்த விஷயம் அறிவழகனுக்கு தெரியவந்தது. இதனால் என்னையும் அவர் கண்டித்தார்.
ஆனாலும் எங்கள் நட்பு தொடர்ந்தது. இதற்கிடையே புத்தாண்டு தினத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை அறிவழகன் பார்த்து விட்டார். இதனால் எங்களுக்குள் பிரச்சினை வந்தது.
அறிவழகன் என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இதனால் என்னை கொலை செய்வதற்கு முன் அறிவழகனை கொலை செய்ய நானும் சுரேகாவும் திட்டம் போட்டோம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு நான் நண்பர்கள் இரண்டு பேருடன் வந்து அறிவழகனை வாயை பொத்தி வீட்டினருகே உள்ள முட்டுசந்தில் இழுத்து வந்து படுகொலை செய்தோம்.
பொலிஸாருக்கு சந்தேகம் வராத வகையில் சுரேகா கையில் வெட்டு காயங்களை ஏற் mபடுத்தி அவரது கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுவிட்டு சென்று விட்டோம். இவ்வாறு கணபதி வாக்குமூலத்தில் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து சுரேகா மற்றும் கள்ளக்காதலன் கணபதி மற்றும் கொலை சம்ப வத்தில் ஈடுபட்ட கணபதியின் நண்பர்கள் இருவரென 4 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
Home ஜல்சா எதிர்வீட்டு அங்கிள் அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு செல்வார்’ – தந்தை கொலை குறித்து பொலிஸ்...