Home பெண்கள் உடல் கட்டுப்பாடு எடை அதிகரிக்க உதவும் 3 அற்புதமான தேன் ரெசிப்பிஸ்

எடை அதிகரிக்க உதவும் 3 அற்புதமான தேன் ரெசிப்பிஸ்

22

நீங்க்ள் மிகவும் பரபரப்புடன் எடையை குறைக்க ஒரு சஞ்சீவி மூலிகையை தேடும் போது, சிலர் எடையை அதிகரிக்கவும் அதைத் தேடுகின்றனர். எனவே நம் உடலில் ஒரு சில பவுண்டுகள் அதிகரிக்க‌ உதவும் சில உணவுகள் உள்ளன. இதற்கு தேன் ஒரு அற்புதமாக வேலை செய்யும் உணவாகும்!
எப்படி தேன் எடை அதிகரிப்பதற்கு உதவும்?
தேன் உடல் எடையை அதிகரிப்பதற்கு இயற்கையிலேயே சில குணங்களைக் கொண்டுள்ளது. எப்படி தேன் எடையை அதிகரிக்க உதவுகிறது என்பதைத் தெரிந்துக் கொள்ள மேலும் படிக்கவும்:
1. தேன் ஒரு தேக்கரண்டி தினமும் பயன்படுத்தும் போது அதன் செயல்திறன் மேம்பட்டு கூழ்க்கனிமங்களை அதிகரிப்பதோடு, கார்போஹைட்ரேட் 17.3 கிராம் கொண்டிருக்கிறது. தேன் மற்ற பொருட்களை விட மிகவும் சிறந்ததாக எல்லோராலும் கருதப்படுகிறது.
2. காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டினால் உடல் எடையானது உடைவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். எனினும், தேன் உடனடியாக மற்றும் நிச்சயமாக இந்த ஆற்றலை ஒரு குறுகிய நேரத்திலேயே முடிக்க பயன்படுத்தப்படுகிறது, இதில் குறைந்த அள்வே சர்க்கரையை கொண்டிருக்கிறது. எனவே, இதில் இயற்கையிலேயே தேவையான அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டிறுக்கிறது.
3. சமீபத்திய ஆய்வுகளில் தேன் ஒரு சிறந்த செயல்திறன் ஊக்கியாக நிரூபிக்கப் பட்டுள்ளது. இது சர்க்கரை அளவை சரியாக பராமரிக்கிறது மற்றும் பளு தூக்குதல் போன்ற கனரக விளையாட்டின் போது தசை பழுது படாமலும், சேதமடையாமலும் இருக்க உதவுகிறது. இது பின்னர் தேவையான அளவு கிளைக்கோஜனை உருவாக்குகிறது.
4. அமெரிக்கன் ஜர்னல் ஒன்றில், தேனானது மருத்துவ ஊட்டச்சத்தாக உடற்பயிற்சிகளின் போது பயன்படுத்தப்பட்டு கார்போஹைட்ரேட்டை எப்போதும் நிலையாக வைத்திருக்க உதவுகிறது, அல்லது வேறு காரணங்களால் தசை இழப்புக்கு காரணமான‌வற்றை குறைக்க உதவுகிறது. தேன் விரைவில் உங்கள் உடலின் ஆற்றலை மற்றும் தசை இழப்பையும் எளிய கார்போஹைட்ரேட் மூலமாகத் தடுக்கிறது.
எடையை அதிகரிக்க தேன் ரெசிப்பிகள்:
தேன் எடை அதிகரிக்க‌ ஒரு பயனுள்ள பொருளாக உள்ளது. ஆனால் தேனை தினமும் உண்ணும் போது அதில் அதிகமான‌ இனிப்பு சுவையைக் கொண்டுள்ளதால் உங்கள் சுவை மொட்டுகளை சோர்வடையச் செய்கிறது. எனவே, இதை உங்கள் உணவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும், தேனில் இடம்பெறும் கொழுப்பு மற்றும் புரதச்சத்து அனவருக்கும் சாப்பிட சிறந்தது. இங்கே நீங்கள் எடையை அதிகரிக்க‌ உதவும் தேன் கலந்த‌ சில உணவுகள் உள்ளன.
ஸ்மூத்தீஸ்:
ஸ்மூத்தீஸ் நம்பமுடியாத சுவையாக இருந்தாலும் இதை ருசிக்கும் போது இந்த ருசிக்கும் நாம் அனைவரும் எளிதில் அடிமையாகி விடுகிறோம். எனவே, உடனடி உணவுடன் இதை சேர்த்துக் கொள்ளும் போது, நீங்கள் ஜிம்மில் இருக்கும் போது உடனடி ஆற்றலை இதன் மூலமாக பெற முடியும். மேலும் தினமும் உங்களுடன் ஒரு குளிர்ந்த பாட்டிலை எடுத்துச் செல்லவும்.
தேன், ஸ்டிராபெர்ரி வெண்ணெய் பழ ஸ்மூத்தீ: சற்று புளிப்பான ஸ்ட்ராபெரி மற்றும் தேன் சிறிது தாராளமான அளவு எடுத்துக் கொண்டு ஒரு பெரிய அளவு வெண்ணணெய் பழத்தை எடுத்துக் கொள்ளவும், இதை சுவையாகவும் மற்றும் ஊட்டச்சத்து வாரியாகவும் செய்ய முடியும். இது எடை அதிகரிப்பதற்கு தேவையான அளவு வெண்ணெய் பழம், தேன் மற்றும் ஸ்ட்ராபெரியில் தேவையான அளவு கலோரிகளைக் கொண்டிருக்கிறது.
தேனுடன் கடலை வெண்ணெய் மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தீ: வாழைப் பழம் மற்றும் வேர்க்கடலை, வெண்ணெய் மற்றும் இனிமையான தேன் சேர்த்து நன்றாக மிக்சியில் அடித்துக் கலக்கவும். கரிம வேர்க்கடலை மற்றும் வெண்ணெய் பழம், வாழை மற்றும் தேன் பயன்படுத்துவதால் நம் உடல் எடை ஒரு சரியான அளவில் அதிகரிக்கிறது மேலும் நம் உடல் எடையை அதிகரிக்க சர்க்கரையை நிறைய சேர்த்து கொள்வதோடு உங்களுடைய புரதச் சத்துகளையும் அதிக அளவில் பெற உதவுகிறது.
சாக்லேட் வாழைப்பழ தேன் ஸ்மூத்தீ: கருப்பு சாக்லேட்டை நன்கு உருக்கி அத்துடன் வாழைப்பழங்கள் மற்றும் தேன் நிறைய சேர்த்து மிக்சியில் நன்கு அடித்துக் கொள்ளவும். டார்க் சாக்லேட்டில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக‌ உள்ளது, இதனுடன் வாழை மற்றும் தேன் சேர்க்கும் போது அது உடல் எடையை அதிகரிக்கிறது.
காலை உணவு:
காலை உணவில் புரதங்கள் மற்றும் கலோரிகள் நிறைய சேர்ப்பதன் மூலம் உங்களுடைய நாளை நன்றாக தொடங்க முடியும்.
ஓட்ஸ்: ஓட்ஸ் 100 கிராம் ஒன்றுக்கு 400 கலோரிகளை கொண்டிருக்கிறது. நீங்கள் இதில் பால் மற்றும் கரிம வேர்க்கடலை வெண்ணெய் கலந்து அத்துடன் பேரிச்சம் பழம், திராட்சை, ஆப்ரிகாட் அல்லது ஆப்பிள்கள் போன்ற சாதாரண பழங்கள் அல்லது உலர் பழங்களையும் கலந்து கொள்வதோடு, அன்னாசிபழம், பேரிக்காய் போன்றவற்றையும் சேர்ப்பதால் இது ஒரு நல்ல நிறைவுடன் இருக்கும். பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள், போன்ற கொட்டைகள் உடன் உலர்ந்த பழங்களை சேர்த்து சாப்பிடுவதும் நன்மை மிக்கதாகும். நீங்கள் பாலாடைக்கட்டி அல்லது தயிருடன் இந்த ஓட்ஸை கலந்து கொள்ளலாம். இந்த மாற்றுவகை செய்முறைகளுடன் தேன் சேர்த்து பயன்படுத்தினால் நீங்கள் ஒரு அற்புதமான எடையை ஆதாயமாகப் பெறலாம்.
முழு பால்: முழு பால் ஒரு லிட்டர் 600 கலோரிகளை கொண்டுள்ளது, இது எடை அதிகரிக்க பெரும்பான்மையான அளவு உதவுகிறது. மேலும் தேன் கலோரிகள் நிறைந்ததாகும்.
பெரும்பாலான மக்களுக்கு தேனினால் ஏற்படும் பல சுகாதார நலன்களை பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கும். எனவே இப்போது நீங்கள் தேனால் எடையை அதிகரிக்க‌ முடியும் என்று நம்புவீர்கள், உங்கள் அடுத்த ஷாப்பிங்கொன் போது இந்த இனிப்பு தேன் பாட்டிலை வீட்டிற்கு கொண்டுவருவது உறுதி.
தேன் சாப்பிடுவதால் நியாபக சக்தி அதிகமாகிறது, ஆனால் இதற்காக நீங்கள் இதை மிகவும் அதிக அளவில் அருந்த கூடாது, மிதமான அளவே எப்போதும் இதை உபயோகப்படுத்த வேண்டும்! தேன் ஒரு கரண்டி பயன்படுத்தினாலே போதும் இதனால் நீங்கள் பார்க்க அழகாக தெரிவதோடு, உங்களுக்கு தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும் அவ்வளவுதான்!