Home சமையல் குறிப்புகள் எக் கட்லெட்

எக் கட்லெட்

21

egg-cutlet-300x167என்னென்ன தேவை?

முட்டை – 5,
மிளகாய்தூள் – 1 கரண்டி,
மசாலாதூள் – 1 தேக்கரண்டி,
உருளைக்கிழங்கு – அரைக்கிலோ,
வெங்காயம் – 1,
தேங்காய்பால் – அரை கப்,
மிளகுதூள் – 1 தேக்கரண்டி,
மைதா – 2 தேக்கரண்டி,
எண்ணெய் – 250 கிராம்.

எப்படிச் செய்வது?

முட்டை, உருளைக்கிழங்கை ஆகியவற்றை வேகவைத்து தோல் எடுக்க வேண்டும். முட்டையை இரண்டாக வெட்ட வேண்டும். ஒரு முட்டையை சிறிது உப்பு மிளகு போட்டு கலக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்க வேண்டும். உருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்து அதனுடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். அதனை கையில் வட்டமாகத் தட்டி நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் நனைத்து எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும்.