Home சமையல் குறிப்புகள் ஊத்துக்குளி மட்டன் ஃப்ரை

ஊத்துக்குளி மட்டன் ஃப்ரை

18

ஊத்துக்குளி மட்டன் ஃப்ரை சுவை தனி சிறப்பு. மட்டன் கறியுடன் மசாலா நன்கு கலந்து சாப்பிடுவதற்கு ஸ்பைசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 1 கிலோ
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 1/4 கப்
கசாகசா வேஸ்ட் -1 டீஸ்பூன்
மட்டன் மசாலா தூள்
இலவங்கப்பட்டை – 1 இஞ்ச்
ஏலக்காய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 7
அண்ணாச்சி மொக்கு – 1
கொத்தமல்லி இலை -1/2 கட்டு
சின்ன வெங்காயம் – 12
தண்ணீர் – 1 கப்
பச்சை மிளகாய் -7
எண்ணெய் – 6 டீஸ்பூன்

தாளிப்பதற்கு:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் -1
பச்சை மிளகாய் – 2

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விடாமல் மட்டன் மசாலாபொடி அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் எல்லாம் சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக மைய பொடியாக அரைத்து கொள்ளவும்.

பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு மட்டன் மசாலா மற்றும், கொத்தமல்லி இலைகளைத்தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 3 விசில் விடவும்.

ஆவி அடங்கிய பின் குக்கர் மூடியை திறக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும்கடுகு, உளுத்தம் பருப்பு,பெரிய வெங்காயம் , பச்சை மிளகாய் இட்டு பொன்னிறமாக வதக்கியபின், வேகவைத்த மட்டன் கலவையை போட்டு நன்றாக 20 நிமிடங்கள் வரை வதக்கவும்.

பின்னர், மட்டன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்பு, அதில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

மிதமான தீயில் நன்கு வறுக்கவும். மசாலா, கறியுடன் நன்கு கலந்ததும் அடுப்பை அணைக்கவும். அதன் மேலாக கொத்தமல்லி இலையைத்தூவி விட்டு பரிமாறலாம்.

ஊத்துக்குளி மட்டன் ஃப்ரை ரெடி!