Home ஆண்கள் உள்ளாடை அணிவதில் தினந்தோறும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

உள்ளாடை அணிவதில் தினந்தோறும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

40

download (7)உள்ளாடை என்பது வெறும் ஆடையாக மட்டும் கருத முடியாது. இது உங்கள் ஆணுறுப்பை பாதுகாக்கும் ஓர் கவசமும் கூட. உங்கள் இல்லற வாழ்கையில் உள்ளாடைக்கும் ஓர் பங்கிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இதில் என்ன தெரிந்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்று கேட்கிறீர்களா..

நீங்கள் உங்களுக்கு ஏற்ற உள்ளாடை தான் அணிகிறீர்களா என்று உங்களுக்கு தெரியுமா? முதலில் பெரும்பாலானவர்கள் உள்ளாடையையே சரியாக அணிவதில்லை. உள்ளாடையை மிக இறுக்கமாக அணிவது தவறு. கோவணம் என்றால் நக்கல் அடிக்கும் சிலருக்கு அது ஒரு சிறந்த உள்ளாடை உடை என்பது தெரிவதில்லை.

சரியான அளவு, சரியான வகை (துணிகளில்) நீங்கள் தேர்ந்தெடுத்து உள்ளாடை அணிய வேண்டியது அவசியம்…

விந்து மற்றும் இரத்தத் ஓட்டம் பாதிப்பு

சில ஆண்கள் ஃபிட் என்று நினைத்துக் கொண்டு மிக இறுக்கமாக உள்ளாடை அணியும் வழக்கம் கொண்டிருப்பார்கள். இதனால், இடுப்புக்கு கீழ் பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் தடைப்படும். இதனால் விந்து உற்பத்தி கூட பாதிக்கப்படலாம்.

ஃபேப்ரிக் உள்ளாடை

சில வகை ஃபேப்ரிக் உள்ளாடை, நைலான் போன்ற கலப்புடன் தயாரிக்கப்படுகிறது, இது வியர்வையை உறிஞ்சும் தன்மையற்றவை. அதனால், வியர்வை பிறப்புறுப்பு, தொடை இடுக்கு மற்றும் புட்டம் பகுதியில் அப்படியே தங்கிவிடும். இதனால் கிருமிகளின் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

காட்டன் தான் நல்லது

அந்த காலத்தில் நமது பாட்டன்மார்கள் கோவணம் கட்டியதை தான் இன்று கேலி கிண்டல் செய்கிறோம். ஆனால், வெளியில் மற்றும் குளிர் இரண்டு காலத்திற்கும் சாரியான தேர்வு காட்டன் உடைகள் தான். அதிலும் உள்ளாடைகளில் காட்டன் அணிவது, பிறப்புறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவண்ணம் பாதுகாக்கும்.

ப்ரீஃப்ஸ் – Briefs

பெரும்பாலும் ஆண்கள் விரும்பி அணியும் உள்ளாடை ப்ரீஃப்ஸ் – Briefs. ஜிம் சென்று தங்களது தொடைகளை வலுவாக வைத்திருக்கும் ஆண்களுக்கு இந்த வகை ஆடை எதுவாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும். விளையாட்டு மற்றும் ஓட்டபந்தயம் போன்றவற்றில் ஈடுபடும் ஆண்களுக்கு இது தடையின்றி செயல்பட உதவும்.

பாக்சர் ஷார்ட்ஸ்

கிட்டத்தட்ட சென்ற நூற்றாண்டில் நமது தாத்தா அணிந்த அதே பட்டாப்பட்டி தான் இன்று பாக்சர் ஷார்ட்ஸ் என்று விற்கப்படுகிறது. இடை பகுதியில் எலாஸ்டிக் உதவியோடு இறுக்கமாகவும், தொடை பகுதியில் கொஞ்சம் லூசாகவும், இலகுவாகவும் இருக்கும். வெயில் காலங்களில் இதை, அந்த இடத்தில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க உடுத்தலாம்.

பாக்சர் ப்ரீஃப்ஸ்

ப்ரீஃப்ஸ் மற்றும் பாக்சர்ஸின் கலப்பு இது என கூறலாம். இடை மற்றும் தொடை பகுதியோடு ஃபிட்டாக இருக்கும். வெயில் காலங்களில் இதை அணிவதை தவிர்த்து, குளிர் காலங்களில் உடுத்தலாம்.

தாங் – Thong

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்களுக்கு ஏற்ற உள்ளாடையாக கருதப்படுவது “தாங்” எனப்படும் இந்த உள்ளாடை வகை.

ஜாக்ஸ்ட்ரேப் – Jockstrap

ஜாக்ஸ்ட்ரேப் – Jockstrap, எனப்படும் இந்த உள்ளாடை ஓர் சிறய வகை உள்ளாடை ஆகும். நம் நாட்டில் இது பிரபலம் இல்லை எனிலும், வெளிநாடுகளில் கொஞ்சம் பயன்படுத்தப்படும் உள்ளாடை வகையாக இருக்கிறது. இது