மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை கேத்தரின் தெரசா.
அதன்பின், தமிழில் கணிதன், கதகளி, ருத்ரமா தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பெண்களுக்கான ஆடை கடை ஒன்றை அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதாவது:
எனக்கு உள்ளாடைகள் அணியவே பிடிக்காது. 12 வயது வரைக்கும் நான் உள்ளாடை அணிந்ததே கிடையாது. இதற்காக, என் அம்மாவிடம் நான் நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன். அதன் பின் பொறுமையாக பேசி என்னிடம் உள்ளாடை அணிவதின் முக்கியத்துவத்தை என் தாய் புரிய வைத்தார். அதன்பின் நான் உள்ளாடைகள் அணிய ஆரம்பித்தேன்.
அதேபோல் ஒவ்வொரு தாயும், தங்களுடைய குழந்தைகளுக்கு உள்ளாடை அணிவதின் அவசியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.