Home சூடான செய்திகள் கள்ளக் காதலினால் உல்லாசப் படுபவரா நீங்கள்???

கள்ளக் காதலினால் உல்லாசப் படுபவரா நீங்கள்???

16

நீங்கள் ஒரு திருமணமான ஆணின் மீது காதலில் இருந்தால், அவர் உங்களை அவரின் சந்தோஷத்திற்காக பயன்படுத்தி வருகிறாரா என்பதை முதலில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அதனால் திருமணமான ஒரு ஆணுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்றால் உங்களின் சொந்த இடர்பாட்டில் செல்லுங்கள். திருமணமான பல ஆண்களுக்கும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து ஒரு மாற்றம் தேவைப்படுவதால், அவர்கள் வேறு ஒரு பெண்ணை நாடுவார்கள். தங்களுக்கு வீட்டில் கிளி மாதிரி நல்ல மனைவி இருந்தாலும் கூட அவர்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு தேவைப்படும். அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள்!!! தாங்கள் இதற்கு முன் தவறான பெண்ணை தேர்ந்தெடுத்து விட்டதாக சில ஆண்கள் மிகவும் புத்திசாலித்தனமாக வலையை விரிப்பார்கள். நீங்கள் அதற்கு மயங்கி, அவ்வகையான ஆண்களின் ஏமாற்று வார்த்தைக்கு விழுந்து விட்டீர்கள் என்றால், கண்டிப்பாக அது நல்ல உறவாக அமையாது. சில நல்ல ஆண்களும் இருக்க தான் செய்கிறார்கள். அவர்கள் இதற்கு முன் மோசமான விதிக்கு பலியாகி இருந்திருக்கலாம். திருமணமாகாத ஆண்கள் ஏன் திருமணமான பெண்களைத் தேடி செல்கிறார்கள்? ஒரு ஆண் உங்கள் மீது உண்மையான காதலை கொண்டிருந்து, உங்களுக்காக தனக்கு பொருத்தமில்லாத மனைவியை பிரிந்து வந்து உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால், அவருடன் நீங்கள் டேட்டிங் செல்வதில் தவறில்லை. ஆனால் உங்களை அவர் தன் சந்தோஷத்திற்காக பயன்படுத்தி விட்டு, வேலை முடிந்தவுடன் தூக்கியெறிந்து விடுவார் என உங்களுக்கு பட்டால் அவருடன் டேட்டிங் செல்வதை தவிர்த்து விடவும்.