கேப்டவுன்: உலகின் முதல் ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சையை செய்து தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரிலுள்ள டைகர்பெர்க் என்ற மருத்துவமனை மருத்துவர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்னர். இதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் இந்த அறுவை சிகிச்சை சுமார் ஒன்பது மணி நேரம் நடந்தது.
அப்போது ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் இரண்டாவது முறை முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவரின் அடையாள விவரங்களைத் தர மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். அறுவை சிகிச்சைக்குப் பின், சிக்ச்சை செய்து கொண்ட ஆண் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட ஆண்குறி முன் தோல் நீக்கத்துக்கு பின்னர், கோளாறுகள் ஏற்பட்டிருந்த அந்த ஆணின் ஆண்குறி அகற்றப்பட வேண்டியிருந்தது. அதன் பின்னர் வேறு ஒருவரின் வயிற்றுப் பகுதியிலிருந்து எடுத்த தோலைக் கொண்டு அவருக்கு ஆண்குறி உருவாக்கப்பட்டு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கோளாறுகள் சரி செய்யப்பட்டுள்ளது.