Home சூடான செய்திகள் உற்சாகம் தரும் உறவு

உற்சாகம் தரும் உறவு

21

imagesஉடலிலும், மனத்திலும் தெம்பு இருக்கிற வரை செக்ஸ் உறவில் ஈடுபடலாம. வயதையோ, குடும்ப சூழ்நிலையையோ நினைத்து அதைத் தவிர்க்க வேண்டியதில்லை. உங்கள் உறவில் உற்சாகம் பிறக்க இதோ சில ஆலோசனைகள்….

வேலை, குடும்பம் போன்ற விஷயங்களுக்கு மத்தியிலேயே உழன்று உழன்று உடலின் தேவைகளை நாம் புறக்கணித்து விடுகிறோம். களைப்பின் காரணமாக செக்ஸ் உறவைத் தவிர்த்து விட்டுத் தூங்கப் போகும் தம்பதியரே பலர். ஆனால் அந்தரங்க உறவுக்குக்களைப்பைப் போக்கும் சக்தி உண்டு என்கிறது மருத்துவம். எனவே அதைத் தவிர்க்காதீர்கள்.

சந்தோஷமாக இருக்கும் போது உறவு கொள்வதை விட, மனம் சோகமாக, சோர்வாக இருக்கும்போது உறவில் ஈடுபடுவதே சிறந்த தாம். அப்போது அதிக பட்ச இன்பம் கிடைப்பதாக சொல்லப் படுகிறது.

குறிப்பிட்ட ஏதேனும் ஒரு தினத்தில் உங்களுக்குள் செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். அம்மாதிரி நாட்களில் உங்கள் கணவரிடம் முன்கூட்டியே அதைத் தெரிவித்து விடுங்கள். அவராக வந்து கேட்க ட்டும் என்று உங்கள் உடல் தேவைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.

நீங்கள் ஒல்லியோ, குண்டோ. நெட்டையோ, குட்டையோ, கருப்போ, சிவப்போ. எப்படியிருந்தாலும் சரி. நீங்கள் தான் உலகத்திலேயே பேரழகி என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த நினைப்பே உங்கள் முகத்தில் ஒருவித அழகைத் தரும். உங்களைக் கவர்ச்சியாகவும் காட்டும்.

உங்களுக்கு உறவு தேவைப்படும் நாளில் உங்கள் கணவருக்கு ஆர்வ மில்லாமல் இருக்கலாம். அது தெரிந்தால் அவரைக் கட்டாயப்படுத் தாதீர்கள். பேச்சால், நடவடிக்கைகளால் அவரது மூடை மாற்ற முடிந் தால் ஓ.கே. இல்லாவிட்டால் இருவருக்கும் பிடித்த ஏதேனும் விஷயங் களைப் பற்றிப் பேசிக்கொண்டிருங்கள். நாளைய பொழுது இதைவிட இனிமையானதாக, இருவருக்கும் உகந்ததாக அமையலாம். யார் கண்டது?

உறவில் உச்சக் கட்டம் என்பதெல்லாம் பெண்ணுக்குப் பெண் வேறு படக் கூடிய விஷயம். அது உடல் சம்பந்தப்பட்டதே இல்லை. மனம் சம்பந்தப்பட்டது. எனவே உச்சக்கட்டத்தை அடைந்தே தீர்வது என்ற எண்ணத்தில் உறவில் ஈடுபடாதீர்கள். இயல்பாய் இருங்கள். உறவில் மனம் முழுமையாய் லயிக்கும் போது எல்லாம் உங்கள் வசமாகும்.

உறவு கொள்ளும் போது உங்கள் உடல் ஊனங்களைப் பற்றிய நினை ப்பு வேண்டாம். அதையே நினைத்துக் கொண்டிருந்தால் உங்களால் உறவை முழுமையாக அனுபவிக்க முடியாது.

உறவின் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய எண்ணங்கள்…

என் மார்பகங்கள் ரொம்பவும் பெரியதாக அல்லது சிறியதாக இருக்கின்றனவோ?

எனக்கு தினமும் செக்ஸ் தேவைப்படுகிறது. அது தெரிந்தால் அவர் என்னைப் பற்றித் தவறாக நினைப்பாரோ?

ரொம்பவும் குண்டாக இருப்பதால் நம்மால் நம் கணவரை முழுமை யாகத் திருப்திப்படுத்த முடியுமா?

ஒரு வேளை என்னால் அவரைத் திருப்திப்படுத்த முடியாவிட்டால் அவர் என்னை வெறுத்து, ஒதுக்கி விடுவாரோ?

போன்ற நினைவுகள் உங்களிடம் தோன்றுவதை தவிர்த்தல் மிக முக்கியம்!