அன்பை வெளிப்படுத்தும் காரணியாக உள்ள முத்தம் பல்வேறு பலன்களை கொண்டிருக்கிறது. முத்தமிடுவது என்பது சாதாரணமானதல்ல அது வியக்கத்தக்க ஆச்சரியத்தக்க பலன்களை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொடுப்பவரை விட பெறுகின்றவருக்குத்தான் முத்தத்தின் பலன்கள் அதிக அளவில் சென்றடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக்கொள்வதன் மூலம் ஏற்படும் பலன்கள் உங்களுக்காக
உறவின் தொடக்கம்
முத்தம் என்பது தாம்பத்யத்தின் ஆரம்பம். உறவை தொடங்குவதற்கான சாவியாக முத்தம் செயல்படுகிறது.
உறவு பலப்படும்
முத்தம் என்பது தம்பதியர்க்கிடையேயான உறவை பலப்படுத்தும். காதலர்கள் ஒருவருக்கொருவர் பிணைப்பை உறுதிப்படுத்தவும் முத்தம் உதவுகிறது.
மன அழுத்தத்தை போக்கும்
மன அழுத்தத்தைப் போக்குவதில் முத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் முத்தமிட்டுக்கொள்வதின் மூலம் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
முத்தத்தின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். 30 நிமிடங்கள் தொடர்ந்து முத்தமிட்டுக்கொள்வதன் மூலம் அலர்ஜி நோய் சரியாகிவிடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உடலை இளைக்கச் செய்யும் முத்தம்
தினமும் 20 நிமிடங்கள் முத்தமிட்டுக்கொள்வது உடற்பயிற்சி செய்வதற்கு சமமாகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 நிமிட முத்தம் 22 கலோரிகளை எரிக்கிறதாம். உடல் இளைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அடிக்கடி முத்தமிட்டுக்கொள்ளலாம்
சுறுசுறுப்பாக்கும் முத்தம்
உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக்குவதில் முத்தம் முக்கிய பங்காற்றுகிறது. முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கச் செய்வதில் முத்தத்தின் பங்கு அதிகம்
வறட்சியைப் போக்கும்
முத்தமிடுவதன் மூலம் வாயில் சலைவா எனப்படும் உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் உதடு வறட்சி நீங்குவதோடு ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது. வாய்துற்நாற்றத்தை அகற்றி கெட்ட பாக்டீரியாவை அடியோடு அகற்றுகிறது