Home பாலியல் உறவு முடிந்ததும் ‘கொட்டாவியா’? தவிருங்கள்!- பாலியில் பகுதி

உறவு முடிந்ததும் ‘கொட்டாவியா’? தவிருங்கள்!- பாலியில் பகுதி

21

images (1)அந்தப் பழக்கம் கிட்டத்தட்ட அத்தனை பேருக்கும் உண்டு. அருமையான உறவை முடித்த பின்னர் அழகான தூக்கம் கண்ணைக் கட்டும். ஒரு ‘தேங்க்ஸ்டா’ கூட சொல்லத் தோணாமல் நிறையப் பேர் கையைக் காலை நீட்டி தூங்கப் போய் விடுவார்கள். சரி, ஏன் உறவை முடித்த பின்னர் ஆழ்ந்த தூக்கம் வருகிறது தெரியுமா?

இந்த உறவுக்குப் பிந்தைய தூக்கம் உடலுக்கும், மனதுக்கும் உண்மையில் மிகவும் நல்லது என்கிறார்கள் டாக்டர்கள். உண்மையில், அருமையான உறவுக்குப் பின்னர் நல்ல தூக்கம் வரும், அது உடலையும், மனதையும் ரிலாக்ஸ் செய்ய மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்பது டாக்டர்களின் கருத்து. ஒரு உறவுக்குப் பின்னர் உடல் இயற்கையாகவே சோர்வடைகிறது.இதனால்தான் அந்தத் தூக்கம் வருகிறது.

அதேசமயம், தூக்கம் வருகிறதே என்பதற்காக உடனடியாக தூங்கப் போய் விடாமல், நமது பார்ட்னருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருத்தல், ஆதரவாக தழுவிக் கொள்ளுதல், அந்த உறவின் அற்புத தருணங்களை பகிர்ந்து கொள்ளுதல் மிகவும் அவசியம் என்பதும் டாக்டர்கள் தரும் யோசனை.

உறவுக்குப் பின்னர் வரும் தூக்கத்திற்கு சில காரணங்கள் உள்ளன. அதைப் பார்ப்போம்.

இரவு நேரத்தில்தான் நமது உடல் மிகவும் சோர்வடையும். அந்த சமயத்தில் நாம் உறவையும் மேற்கொள்ளும் போது கூடுதல் சோர்வை நாம் சந்திக்க நேரிடுகிறது. நமது உடலை தூக்கம் வேகமாக தழுவ ஆரம்பிக்க இதுவும் ஒரு காரணம்.

உறவின்போது உச்ச நிலையை அடையும் ஆண் விந்தனுவை வெளிப்படுத்திய அடுத்த நொடியே அவனது உடலை சோர்வு முழுமையாக ஆக்கிரமிக்கிறது. ஆணின் உடல் வெளிப்படுத்தும் ஹார்மோன் உடலை வேகமாக சோர்வடைய வைக்கிறது. தூக்க உணர்வு வேகமாக வந்து தழுவுகிறது. உடல் இயக்கத்தின் அதி வேக செயல்பாடுகளும் இந்த தூக்கத்திற்கு இன்னொரு காரணம்.

செக்ஸ் உறவின்போது இதயத் துடிப்பு அதி வேகமாக இருக்கும். அதேசமயம், உடல் அமைதி அடையும்போது அந்த வேகம் குறைந்து படிப்படியாக நார்மல் ஆகிறது. உறவின்போது நமது மூச்சு ஆக்சிஜனுக்காக அதிகமாக துடிக்கும். உறவு முடியும்போது அதிக அளவிலான ஆக்சிஜனை நமது உடல் சுவாசிக்கிறது. ஆக்சிஜன் திடீரென அதிகமாவதால் உடலின் அனைத்துப் பாகங்களும் வேகமாக ரிலாக்ஸ் ஆகின்றன. இதுவும் தூக்கம் கண்ணைத் தழுவ ஒரு காரணம்.

யாருக்கு உறவுக்குப் பின்னர் வேகமாக தூக்கம் வருகிறதோ, அவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடையலாம். காரணம் அவர்களது உறவு முழுமையாக இருந்திருக்கிறது என்று அர்த்தமாம். அதேசமயம், சரியாக தூக்கம் வராவிட்டாலோ அல்லது அசவுகரியமாக உணர்ந்தாலோ உறவில் முழுமை இல்லை அல்லது உடல் ஆரோக்கியத்தில் குறை என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

உறவுக்குப் பின்னர் நமது உடலை நல்ல இயல்புக்குக் கொண்டு வர குளிர்ச்சியான எலுமிச்சை சாறை அருந்தலாம் என்று டாக்டர்கள் அட்வைஸ் தருகிறார்கள். இது நம்மை மேலும் புத்துணர்ச்சியாக்கவும், நல்ல தூக்கத்தில் மூழகவும் உதவுமாம்.

இது ஆண்களின் கதை. பெண்களைப் பொறுத்தவரை உறவுக்குப் பின்னர் உடனே அவர்களுக்குத் தூக்கம் வராது. காரணம், அவர்களின் உச்ச நிலை உடனடியாக அடங்கி விடாது என்பதால். உறவின்போது பெற்ற அனுபவத்தையும், பரிபூரணத்தையும் அவர்கள் மேலும் சில நிமிடங்களுக்கு நினைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த உணர்விலிருந்தும், நினைவிலிருந்தும் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியாது. இதனால்தான் உறவை முடித்த பின்னர் தூங்கப் போய் விடாமல், அனுசரணையாக, ஆதரவாக, காதலோடு அவர்களுடன் சில நிமிடங்களை ஆண்கள் பகிர்நது கொள்ள வேண்டும் என்கிறார்கள். அப்போதுதான் ஆணுக்கு மட்டுமல்லாமல், பெண்ணுக்கும் அன்றைய உறவு முழுமை அடையும் என்பது டாக்டர்கள் கூறும் கருத்து.

உடல் ரீதியான தேவைகளுக்காக மட்டும் ஒரு பெண்ணும் சரி, ஆணும் சரி உறவை நாடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். உடலையும் தாண்டி மனதையும் இங்கு முக்கியமாக கருத வேண்டும். மனதின் உணர்வுகளும் முழுமையாக பூர்த்தியாகும்போதுதான் எந்தவிதமான உறவாக இருந்தாலும் அது உண்மையிலேயே முழுமையடைய முடியும்.