பிரபல யோகாசன நிலையத்தில் வெளியிட்ட யோகாசன புத்தகத்தில் ஒரு தகவலை படித்தேன். மிகவும் விசித்திரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. அது என்னவென்றால் உ டல் உ றவிற்கு பின்னர் இருவரும் வலது பக்கம் சாய்ந்தவாறு உறங்கினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அதேபோல இடது பக்கம் சாய்ந்தவாறு உறங்கினால் பெண் குழந்தை பிறக்கும் என்றும் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள். இதெல்லாம் உண்மையா? ஒருமுறை ஆராய்ந்துவிட வேண்டும் என இது குறித்து தேடியபோது கிடைத்த தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
எங்கு தேடினாலும் குழந்தையின் பா லினத்தை நிர்ணயம் செய்யப்போவது ஆணின் வி ந்துமட்டுமே! ஏனெனில் பெண்ணிடம் எக்ஸ் எக்ஸ் (XX) என்ற கு ரோமோசோம்கள் இணை மட்டுமே இருக்கும். ஆணிடமோ எக்ஸ் ஒய் (XY) என்றவாறு இருக்கும். பெண்ணிடம் உள்ள XX கு ரோமோசோமிலிருந்து ஒரு X கு ரோமோசோம் ஆணின் ஒரு X உடன் இணைந்தால் XX என்ற இணை உருவாகி பிறப்பது பெண்ணாக இருக்கும். அதுவே பெண்ணிடம் உள்ள XX கு ரோமோசோமிலிருந்து ஒரு X ஆனது ஆணின் ஒரு Y உடன் இணைந்தால் XY என்ற இணை உருவாகி பிறப்பது ஆணாக இருக்கும்.
காலம்காலமாக பா லினம் இப்படி தான் உருவாகிறது என்கிறது அறிவியல். ஆனால் இடதுபக்கம் உறங்கினால் பெண் என்றும் வலதுபக்கம் உறங்கினால் ஆண் என்றும் சிலர் கூறுவதையும் கேட்டுள்ளேன். அதேபோல் இப்போது யோகாசன புத்தகத்தில் குறிப்பிட்டதை பார்த்த உடன் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம். ஏனெனில் நம்மூரில் எழுத்து மூலம் நிரூபிக்கப்படாத சில எதார்த்த உண்மைகள் உலாவிக்கொண்டு தான் இருக்கிறது அவற்றுள் ஒன்றுதான் இதுவும்! முதலிரவு அறைக்குள் பெண்ணை அனுப்பிய உடன் பின்னாடி உள்ள தோழிகள் அல்லது அத்தைமார்கள் யாராவது சொல்வார்களே சில அறிவுரைகள் அவற்றுள் ஒன்றுதான் இதுவும்.