ஆர் சுந்தரராஜன், தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர்களில் ஒருவர். ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘மெல்ல திறந்தது கதவு’, ’வைதேகி காத்திருந்தாள்’, ‘ராஜாதி ராஜா’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘குங்குமச் சிமிழ்’, ‘என் ஆசை மச்சான்’ என வெள்ளி விழா படங்களைத் தந்தவர்.
இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு, இயக்குநராக அவர் ரீ-எண்ட்ரியாகும் படம் ‘உயிர் எழுத்து’.
“நட்பையும், அதன் தியாகங்களையும் சொல்லும் ஒரு யதார்த்தமான படைப்பு ‘உயிர் எழுத்து’ என்கிறார்கள் படக்குழுவினர்.
படத்தின் கதை இது:
ஒரு அழகான கிராமம். அங்கே ரவுசு கிளப்புற நான்கு நண்பர்கள். ஆட்டம் பாட்டம் கொண்ட்டாம் என ஊர்ல வம்பு இழுப்பதுதான் இவங்களுடைய வேலை. கிராமத்தில் விழா வர, இவர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகிறார்கள். விழாவில் கதாநாயகி கீர்த்தி சாவ்லா மெல்லிசை கச்சேரிக்காக வருகிறார். கீர்த்தி சாவ்லாவின் வசீகரமான குரலால் காதல் வயப்படுகிறார் வசீகரன். விழா முடிந்தும், கீர்த்தி சாவ்லாவின் குரலையும், அவரையும் மறக்க முடியாமல் தவிக்கும் வசீகரனின் காதலுக்காக ரிஸ்க் எடுக்கிறார் லாரன்ஸ்.
கீர்த்திசாவ்லா இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து, அவருடை பக்கத்து வீட்டில் குடியேறுகிறார்கள் இந்த நண்பர்கள். கீர்த்தி சாவ்லாவுக்கு வசீகரன் மீது காதல் வரவில்லை. அதனால் கீர்த்தி சாவ்லாவுக்கு பார்க்கும் மாப்பிள்ளை படத்திற்கு பதிலாக வசீகரனின் படத்தை அனுப்பி தனது ‘மாஸ்டர் கேமை’ தொடங்குகிறார் லாரன்ஸ். இதனால் கீர்த்தியும், வசீகரனும் காதல் வயப்படும்போது, உண்மையான மாப்பிள்ளை வசீகரன் இல்லை என்பது தெரிய வருகிறது. அவர்களுக்காக லாரன்ஸ் என்ன செய்கிறார், இதற்கு பிறகு அந்த காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா, என்பதே படத்தின் உருக்கமான க்ளைமாக்ஸ்,” என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் ‘மாத்யம் புரொடக்ஷன்ஸ்’-ன் எஸ் ஸ்ரீகாந்த்.
ராகவா லாரன்ஸ், கீர்த்திசாவ்லா, வசீகரன் உள்பட பலரும் நடித்துள்ளனர்,
கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஆர். சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். கங்கை அமரன், பா. விஜய், ஆர். சுந்தர்ராஜன் பாடல்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.
விரைவில் திரைக்கு வருகிறது உயிர் எழுத்து!