Home பெண்கள் அழகு குறிப்பு உதட்டு வெடிப்புத் தொல்லையா?

உதட்டு வெடிப்புத் தொல்லையா?

25

download-24சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

* பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெறும் பாலாடையும் உதட்டில் தேய்க்கலாம்.

* வெண்ணையுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால் உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

* இரவு படுக்கும் போது தினமும் உதட்டில் மேல் தேங்காய் அல்லது நெய் தடவி வந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பு பிரச்சனை தடுக்கப்படும்.

* சிலருக்கு வயிற்றில் புண் இருந்தாலும் உதட்டில் வெடிப்பு, புண் வரும். இவர்கள் தேங்காய் பால் குடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.