Home ஆரோக்கியம் உடல் உடற்கூறியல் மற்றும் இனப்பெருக்கம்

உடல் உடற்கூறியல் மற்றும் இனப்பெருக்கம்

28

மூளை
பாலுணர்வின் போது, மூளை மகிழ்ச்சிகரமான உணர்வுநிலைகளை நரம்பு தூண்டுதல் மூலம் தோலின் உணர்ச்சிகள் மொழிபெயர்க்கின்றன. மேலும் மூளை நரம்புகளையும், தசைகளயும் பாலுணர்வு நடத்தையின் போது கட்டுப்படுத்துகிறது. மூளை இயக்குநீரை சீராக்குவதன் மூலம் பாலியல் ஆசைகளைத் தூண்டும் உளவியல் தோற்றக் காரணியாக நம்பப்படுகிறது. மூளையின் வெளி அடுக்கு (பெருமூளை புறணி (அ)செரிப்ரல் கார்டெக்ஸ்) சிந்தனை மற்றும் பகுத்தறிவைத் தூண்டுதல் மூலம் பாலியல் எண்ணங்கள் மற்றும் கற்பனைகளைத் தோற்றுவிப்பதாக அறியப்படுகிறது. புறணியின் கீழ் அமிக்டலா ஹிப்போகேம்பஸ், சிங்குலேட் மேன்மடிப்பு, இடைச்சுவர் மற்றும் லிம்பிக் அமைப்புகள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் தொடங்குமிடமாகவும், பாலியல் நடத்தை சீரக்குமிடமாகவும் நம்பப்படுகின்றன
ஹைப்போதலாமஸ் பாலியல் செயல்பாட்டில் மூளை மிக முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த லிம்பிக் அமைப்புகளை இணைக்கும் நரம்புத்தொகுதி ஆகும். இது பல குழுக்கள் அடங்கிய மூளையின் அடிப்பகுதியில் உள்ள சிறிய பகுதியாகும். ஹைப்போதலாமஸ் முக்கியக்கூறுகளில் ஒன்று வலது கீழ்ப்புறத்திலுள்ள உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகும். பிட்யூட்டரி சுரப்பி ஹைப்போதலாமஸ் மற்றும் சுய உற்பத்தி ஹார்மோன்களை சுரக்கிறது. சுரக்கும் நான்கு முக்கிய பாலியல் ஹார்மோன்கள் ஆக்சிடோசின், நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன்(FSH), ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆன்ட்ரோஜன் ஆகும். ஆக்ஸிடோசின் காதல் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. இது உடலுறவின் உச்ச நிலையின் போது ஆண் மற்றும் பெண் ஆகிய இருவராலும் வெளியிடப்படுகிறது. இரு ஆக்சிடோசின்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக நம்பப்படுகிறது. புரோலாக்டிக் மற்றும் ஆக்சிடோசின் ஆகிய இரண்டும் பெண்களின் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது. நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன் (FSH) முட்டை முதிர்ச்சியைத் தூண்டி பெண்களின் அண்ட விடுபடல் மற்றும் ஆண்களின் விந்து உற்பத்தியையும் தூண்டுகிறது. மேலும், ஒரு முதிர்ந்த முட்டை வெளியீட்டில் இது அண்டவிடுப்பினைத் தூண்டுகிறது.
பெண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை
பெண்கள் இனப்பெருக்க மண்டலம் உள், வெளி (பிறப்புறுப்பு) இனப்பெருக்க உறுப்புகள் என இருவகைப்படும். பெண்கள் புற இனப்பெருக்க உறுப்பு (பிறப்புறுப்பு) கூட்டாக பெண்ணின் கருவாய் என அழைக்கப்படுகிறது. பெண்ணின் கருவாய், மேல் உதடு, சிறிய உதடு, பெண்குறிமூலம், யோனி, சிறுநீர்வடிகுழாயின் தொடக்கம் ஆகியவை அடங்கும். பிறப்புறுப்பைத்தூண்டல் பாலுணர்வின் அங்கமாகும். மகளிர் பிறப்புறுப்பு நபருக்கு நபர் அளவு, வடிவம், நிறம் ஆகியனவற்றில் மாறுபடுகின்றன.
புற பெண் உடற்கூறியல்
பெண்குறி மூலம்
மேலுதடு
பெண்குறிக் காம்பு
பார்த்தோலின் சுரப்பி
புணர் புழை (யோனி)
யோனி முகம் அல்லது வெளி இதழ்
.
உள் பெண் உடற்கூறியல்
சூலகம்
கருப்பை
கருப்பை வாய் (செர்விக்ஸ்)
பாலோப்பியன் குழாய்
இனச்சேர்க்கைத் தடம்
ஆண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை
ஆண் இனப்பெருக்க உறுப்பு உள்/வெளி என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. பெண் மாதவிடாய் சுழற்சி போலல்லாமல், ஆண் இனப்பெருக்கச் சுழற்சியில் அவர்களின் விந்துசுரப்பி தொடர்ந்து தினமும் மில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது.
புற ஆண் உடற்கூறியல்
ஆண்குறி
லிங்கம்
விந்தகப்பை
முகதுவாரம்
அண்டை சுரப்பி
தண்டுப்பகுதி
உள் ஆண் உடற்கூறியல்
விதைமேற்றிணிவு (எபிடெடிமிஸ்)
துணை சுரப்பிகள் (வாஸ் டெஃபெரன்ஸ்)
விந்து சேகரிப்புப்பை (அக்செசரி சுரப்பி)
விந்துகூழ்ச் சுரப்பி (புராஸ்டேட் சுரப்பி)
சிறுநீர்க்குழாய் மொட்டு சுரப்பிகள் (பல்போயுரித்ரல் சுரப்பி)
பாலியல் பிறழ்ச்சி மற்றும் பாலியல் பிரச்சினைகள்
ஆண்மைக்குறைவு
விரைப்புத்திறன்
விந்தணுக்கள் குறைவு
விருப்பமின்மை
பாலியல் விழிப்புணர்வின்மை
பாலியல் வழிக் கோளாறுகள்
பாலியல் அடிமையாதல்
பாலுறவு வலி
நீண்ட விறைப்புத்தன்மை
பிறப்புறுப்பு வலி