Home உறவு-காதல் உடலுறவு மோகம் உறவுகளை சிதைக்கும்!!

உடலுறவு மோகம் உறவுகளை சிதைக்கும்!!

29

images (2)மனிதன் என்று மட்டுமில்லாமல், விலங்குகளுக்கு மத்தியிலும் கூட உடலுறவு என்பது அத்தியாவசியம். ஆனால் அளவுக்கு மீறும் போதும் அமிர்தமும் கூட நஞ்சாக மாறிவிடும். இது உடலுறவிலும் பொருந்தும். அளவுக்கு மீறி உடலுறவில் நாட்டம் செலுத்துவது, துணையை தாம்பத்திய உறவில் ஈடுபட வற்புறுத்தும் குணம் போன்றவை இல்லறத்தை சிதைக்கும் செயல்பாடு ஆகும்.
இதனால், உங்களது உடல்நலமும், குடும்ப நலமும் என இரண்டுமே பாதிக்கப்படும். குறிப்பாக மன அழுத்தம், கோபம் போன்றவை தான் இவற்றை சீர்குலைக்கும் கருவியாக அமைகிறது….
உறவு பிணைப்பு
உடலுறவில் அதிகமாக நாட்டம் செலுத்துவதால் கணவன், மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் அந்த பிணைப்பானது முதலில் அறுபடுகிறது. எனவே, உடலுறவில் அதிகமாக மோகம் கொள்ள வேண்டாம். மேலும் உங்கள் துணையை தேவையின்றி கட்டாயப்படுத்த வேண்டாம்.
கடமைகள் இல்வாழ்க்கை கடமைகள்
என்று சில உள்ளன, குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளை வளர்க்க வேண்டும், வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல வேண்டும். உடலுறவு மீதான அதீத மோகமானது இவற்றுக்கு தடையாக இருக்கிறது.
மன அழுத்தம்
அளவுக்கு அதிகமாக உடலுறவு மீது மோகம் கொள்வதால், இன்று உடலுறவு சாத்தியம் இல்லை என்பது மன அழுத்தத்தை உண்டாக்கும். இது போக போக உடல்நலத்தை வெகுவாக பாதிக்கும்.
கோபம்
சில சமயங்களில் மன அழுத்தம் காரணமாக கோபம் அதிகரிக்கலாம். வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் இந்த கோபத்தின் வெளிபாடு உங்கள் பெயரை சீர்குலைக்கும்.
செயல்திறன் குறைபாடு
கோபத்தின் காரணமாக உங்களது அன்றாட வேலையில் இருந்து அலுவலக வேலை வரை செயல்திறன் குறைபாடுகள் ஏற்படும். எனவே, உடலுறவின் மீதான அதிகமான நாட்டம் அல்லது மோகத்தை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
விவாகரத்து
மன அழுத்தம், கோபம், செயல்திறன் குறைபாடு போன்றவை ஒன்றிணைந்து ஓர்நாள் விவாகரத்து வரை செல்லலாம்.