Home அந்தரங்கம் உடலுறவு இல்லாமல் உறவில் ஈடுபட சில சிறப்பான வழிகள்!!!

உடலுறவு இல்லாமல் உறவில் ஈடுபட சில சிறப்பான வழிகள்!!!

91

சில தம்பதிகள் வெறும் உடலுறவுக்காக மட்டுமே உறவில் ஈடுபடுவார்கள். வெறும் உடல் ரீதியான உறவு மட்டுமே உண்மையான உறவிற்கு இலக்கணமாக அமையாது. உங்களை நேசிப்பதற்கும் அக்கறையாக கவனித்துக் கொள்வதற்கும் யாருடனாவது உண்மையான உறவு வேண்டுமானால், உடலுறவு இல்லாத உறவை முயற்சித்து பாருங்கள். உங்களால் இருக்க முடியுமா?

ஒரு உறவில் உடலுறவு இல்லையென்றால், அந்த பந்தத்தில் தீப்பொறி இருக்காது என்பது தான் பலருடைய கருத்தாகும். உடலுறவு இல்லாத உறவில் ஈடுபடும் போது நீங்கள் நினைக்க முடியாத பல வடிவங்களில் உங்கள் இருவரின் அன்யோநியத்தை அது அதிகரிக்கும். ஒருவர் மீது மற்றவர் எந்தளவு அக்கறை கொள்கிறார்களோ, எந்த அளவு பாசம் காட்டுகிறார்களோ, அந்த அடிப்படையில் தான் உறவுகள் அமைகிறது. அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் ஒரு வகை அன்பின் வெளிப்பாடு தான் உடலுறவு.

காதலை வெளிப்படுத்த பல வழிகள் இருக்கும் போது, உடலுறவு இல்லாமல் அதனை வெளிக்காட்டுவது ஏன் சிறப்பான முறையாக இருக்க கூடாது? சரியான நேரத்தில் மலர்வதற்காக காத்திருக்கிறீர்களா? அப்படியானால் உடலுறவு இல்லாமல் எப்படி உறவில் ஈடுபடுவது என்பதை மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒன்றாக பயணியுங்கள்:-

ஒன்றாக பயணியுங்கள், உலகத்தை ஒன்றாக ரசித்திடுங்கள், முடிவில் எசக்கு பிசக்காக எதுவும் நடக்காமல் இருக்க இரவு நேரத்தில் தனிதனி அறையில் தங்கிக் கொள்ளுங்கள்.

ஒரே பொழுதுபோக்குகளை பகிர்வது:-

உடலுறவு இல்லாமல் உறவில் ஈடுபடுவதற்கு, ஒரு பொழுதுபோக்கை உருவாக்கி, அதில் இருவரும் நேரத்தை செலவிடுங்கள். அப்படி ஒன்றாக நேரத்தை செலவிடும் போது உண்மையான உறவை உணர்வீர்கள்.

இரண்டு பேரும் விளையாடுங்கள் (உடல் ரீதியாக அல்ல):-

இரண்டு பேரும் விளையாடுங்கள் ஆனால் உடல் ரீதியாக அல்ல. கால் பந்து, கூடை பந்து அல்லது நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு உங்களின் கவனத்தை திசை திருப்புங்கள்.

அர்த்தமுள்ள உரையாடல்கள்:-

அர்த்தமுள்ள உரையாடல்களால் உடலுறவு இல்லாத ஒரு உறவை நீங்கள் பெறலாம். அப்படிப்பட்ட அர்த்தமுள்ள உரையாடல்களால் ஒருவரையொருவர் நன்கு அறிந்தும் கொள்ளலாம்.

நல்ல உணவுகளை சமைத்தல்:-

உங்கள் ஆணின் மனதில் இடம் பிடிக்க அவர் வயிற்றை நிறைக்க வேண்டும். அவருக்கு நல்ல உணவு சமைத்து, கொஞ்சம் ரெட் ஒயின் மற்றும் இதமான இசையோடு உணவினை பரிமாறுங்கள்.

ஒருவருக்கொருவர் ஆச்சரியங்களை அளித்திடுங்கள்:-

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒருவருக்கொருவர் ஆச்சரியங்களை அளித்து, உடலுறவு இல்லாமல் உறவில் ஈடுபடலாம். வாழ்க்கையில் சின்ன சின்ன ஆச்சரியங்கள் அளித்து வந்தால், உங்கள் உறவில் ஏற்படும் வளர்ச்சியை நீங்கள் நன்றாக உணரலாம்.

உடல் ரீதியாக நெருங்க வேண்டாம்:-

தேவைப்படாத பட்சத்தில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு அருகில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் உங்கள் துணையுடன் உடல் ரீதியாக சற்று விலகி இருந்தால், உடலுறவு இல்லாமலேயே உறவில் ஈடுபடலாம்.

பல பேராக சேர்ந்து டேட்டிங் செல்லுதல்:-

உங்கள் துணையுடனான உறவு உண்மையானதாக இருக்க பல பேர் ஒன்றாக சேர்ந்து டேட்டிங் செல்வதும் ஒரு வழியாக விளங்கும். அது சந்தோஷமாகவும் சுவாரஸ்யமாகவும் கூட இருக்கும்.

பின்னாளில் செய்ய வேண்டியவை பற்றி பேசுதல்:-

பின்னாளில் செய்ய வேண்டியதைப் பற்றி பேசுவது, கலந்துரையாடுவது ஒரு சிறப்பான விஷயமாக இருக்கும். அதனைப் பற்றி பேசும் போது உங்கள் உறவில் உங்கள் எல்லையை பற்றியும் பேசுங்கள். கண்டிப்பாக உடலுறவு இல்லாத ஒரு உண்மையான உறவை வாழலாம்.

வருங்காலத்தின் ஐயப்பாடுகள்:-

நீங்கள் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் வருங்காலம் எப்படி காத்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எந்தவித அறிகுறிகளும் தென்படாது. அதனால் உங்கள் வருங்காலம் என்னவென்று சரியாக புலப்படும் வரை உங்கள் உறவில் உடலுறவு வேண்டாமே.

கற்பனையில் உடலுறவு:-

கற்பனையில் உடலுறவு கொள்வது ஆபத்தில்லை. உடலுறவு இல்லாமல் உறவில் ஈடுபட கற்பனை செய்வதும் ஒரு சிறந்த வழியாகும்.

உணர்வை தூண்டுகின்ற இடத்தை தவிர்க்கவும்:-

பாலுணர்வை தூண்டுகின்ற இடங்களை தவிர்ப்பதும் நல்லது. ரிசார்ட், தாங்கும் விடுதி போன்ற இடங்களை உங்கள் உறவில் தவிர்க்க வேண்டும். அப்போது தான் உடலுறவையும் தவிர்க்க முடியும்.