Home பாலியல் உடலுறவுக்கு பின் பெண்கள் ஏன் அழுகிறார்கள்

உடலுறவுக்கு பின் பெண்கள் ஏன் அழுகிறார்கள்

20

timthumbஉடலுறவுக்கு பின்னர் காரணமின்றி பெண்கள் அழுவதாக தெரிகிறது. அவர்களின் இந்த சோக மனநிலைக்கான காரணத்தையும் ஆய்வு ஒன்று விளக்குகிறது.
உடலுறவுக்கு பின்னர் பெண்கள் பொதுவாக அழுகிறார்களாம். சினிமாவில் வருவது போன்று ஆண் – பெண் உறவுக்கு பின்னர் என் கற்பு பறி போய் விட்டதே!! அல்லது திருமணத்துக்கு முன்னரே செக்ஸ் வைத்து கொண்டோமே என்று புலம்பி அழும் அழுகை கிடையாது.

ஆண், பெண் இருவருக்கும் இடையே நடைபெறும் ஆரோக்கியமான உடலுறவுக்கு பின்னரும் பெண்கள் அழுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
மேலும், சில கசப்பான அனுபவங்கள், உடல் உறவில் ஈடுபடும் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உளவியல் ரீதியான சிந்தனைகள் போன்றவை தான் பெரும்பாலும் பெண்கள் அழுவதற்கும், சோகமான மனநிலைக்கு உள்ளாவதற்காண காரணம் எனவும் அந்த ஆய்வு விளக்குகிறது.
அந்த ஆய்வுப்படி, ஐம்பது சதவீத பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு காரணமே இல்லாமல் அழுவதாகவும் அல்லது சோகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காரணமே இன்றி பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சோகமாக இருப்பதற்கு சேர்க்கைக்கு பின்னர் ஏற்படும் பதட்டநிலையே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆண்களின் உடல் அமைப்பிற்கும், பெண்களின் உடல் அமைப்பிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. மேலும், உறவில் ஈடுபடும் போது உடலில் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அவ்வாறு தூண்டப்படும் ஹார்மோன்களால் காரணமின்றி கண்ணீர் வருமாம்.

முந்தைய காலங்களில் ஏதேனும் உறவில் ஈடுபட்டு, அதனால் நேர்ந்த கசப்பான அனுபவங்களும் சேர்க்கைக்கு பின்னர் ஏற்படும் பதட்ட நிலையை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
முதல் முறை உடல் உறவில் ஈடுபடும் போது பெரும்பாலும் சோகம் அல்லது அழுகை வருகிறது என ஆய்வில் பங்கேற்ற பெண்கள் கூறியுள்ளனர். எனவே, இது ஆனந்த கண்ணீராகவும் பார்க்கப்படுகிறது.
முரட்டுத்தனமான செக்ஸ் உறவு, கருப்பை வாயில் ஏற்படும் பலமான மோதல் காரணமாக வலி தாங்க முடியாமல் சில பெண்கள் அழுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வு மூலம் வெளிவந்திருக்கும் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், பெண்களின் இத்தகைய மனநிலைக்கு ஆண்கள் காரணம் இல்லை என்பது தான். இந்த ஆய்வில் கலந்து கொண்ட பெண்கள் இந்த சோக உணர்வை விளக்க முடியாத ஒரு உணர்வாக தான் கூறியுள்ளனர்.