உடலுறவு கொள்வது அவரவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறு படும். சிலருக்குத் தினமும் உடலுறவு இல்லாமல் முடியாது. சிலருக்கு வாரத்திற்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இருமுறை இருந்தால் கூடப் போதும்.
அவரவர்களுடைய உடற்கூற்றைப் பொறுத்து உடலுறவின் தேவை ஏற்படும். உடலுறவு கொள்ளாத பிரம்மசாரிகளைவிடக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். மனிதனுக்கு உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண் டாவது இடத்தை வகிக்கிறது.
பொருத்தமான வாழ்க்கைத் துணை யைத் தாங்களே தேடி நிர்ணயித்துக் கொள்ள முடியாத பரிதாபகரமான சூழ்நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்ககு முன்பாக எழுதப்பட்ட தமிழ், சமஸ்கிருத நூல்களில் பாலுறவுபற்றிக் குறிப்பிட்டிருப்பது போல இன்று யாரும் எழுதத் துணியாததற்குக் காரணம் பாலியல் எழுத்தாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ என்று பயந்தான் காரணம். மக்கள் இன்னும் மனம் முதிர்ச்சி அடையவில்லை.
காதலும், காமமும், உடலுறவும் வாழ்க் கையில் இன்றியமையாதவை. அவற்றைச் சொல்லவேண்டிய முறையில் சொன்னால் தான் மகாபாரதம், இராமாயணம், சாகுந்தலம், சங்கப் பாடல்கள், திருக்குறள் உட்பட எல்லா இலக்கியங்களையும் சுவைத்து அனுபவிக்க முடியும். மணமாகாத வாலிபர்களின் இச்சை யைத் தூண்டப் பச்சைபச்சையாக உடலுறவு களை வர்ணித்துச் சதை வியாபாரம் செய்யும் மலிவுப்பதிப்புகள், சாலையோரப் புத்தகக் கடைகளில் மறைத்து விற்கப்படுகின்றன. அவைகள் எல்லாம் ஆபாசமானவை. திருக்குறளில காமத்துப்பால் என்று பிரித்துத் தனியாகப் பாலுறவைப்பற்றி எழுதி யுள்ளார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காமசூத்திரத்தைத் தமிழில் அதிவீரராம பாண்டியன் கொக்கோகம் என்று எழுதியுள்ளார். இந்நூல், பாலுறவுபற்றி விரி வாகக் கூறுகிறது. வடநாட்டில் கஜுரா, கோனார்க் கோவிலில் உடலுறவு நிலையை அற்புதச் சிற்பங்களாக வடித்துள்ளனர். தென்னிந்தியக் கோவில்களிலும் இத்தகைய உடலுறவு நிலைச் சிற்பங்களைக் காணலாம்.
எல்லாப் பிரச்சினைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா முடியும் ; அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான், தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றையும் தீர்க்க முடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (Imune) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன.