மனதளவில் ஒவ்வொரு பெண்ணும் உடலுறவில் ஈடுபடும் போது நிறைய மாற்றங்களை உணர்கிறாள். மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவிலும் நிறைய மாற்றங்கள் நடைபெறுகின்றது. ஆனால் அவை நமக்கு நேரடியாக தெரிவதில்லை. இவை அனைத்திற்கும் நம் மூளை தான் காரணம். இவற்றில் வெளிவரும் ஹார்மோன்களும் தான் முக்கியக் காரணம்.
உடலுறவில் ஈடுபடும் போது அல்லது அதன் உச்சக்கட்டத்தை அடையும் போது ஹார்மோன்கள் அதிகமாக உருவாகின்றன. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இது அதிகமாகவே இருக்கும். மூளையில் வெளியாகும் இத்தகைய ஹாப்பி ஹார்மோன்கள் உடலில் வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கும். அந்த மாற்றங்கள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இந்த பதிப்பில் பார்ப்போம் வாருங்கள்…
தொடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது
சாதாரணமாக தொடும் போதில் இருந்தே மூளையின் வேலை துரிதப்படுத்தப்படுகிறது என்றும், கருப்பை வாய், கால்கள் மற்றும் யோனி போன்ற பகுதிகள் மிகுதியாகத் தூண்டப்படுகின்றது என்றும் ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிடாஸின் வெளியேற்றம்
ஆக்ஸிடாஸின் என்பது காதல் அல்லது அரவணைப்பிற்காக மூளையில் வெளிவரும் ஹார்மோன்கள். எப்பொழுது ஒரு ஆண் பெண்ணை தொடுகிறானோ அப்போது இந்த ஹார்மோன் உடனே வெளியேறும். உடலுறவில் ஈடுபடும் போதும் இந்த ஹார்மோன்கள் வெளியேறும்.
தனியாக இன்பம் அடைவது
கருப்பை வாய், கால்கள் மற்றும் யோனி போன்ற பகுதிகள் தனித்தனியாக தூண்டப்பட்டு உச்சக்கட்ட மகிழ்ச்சியை அடைய முடியும் என்றும் கூறப்படுகிறது. இவற்றிற்கும் மூளையில் வெளிவரும் ஹார்மோன்கள் தான் காரணம். மேலும் இவை மூளையின் வேலையைத் துரிதப்படுத்துகிறது.
மூளை சுறுசுறுப்படையும்
ஒரு பெண் உடலுறவில் ஈடுபடும் போது அவளின் மூளையின் சில பாகங்கள் சுறுசுறுப்படைகின்றது. இதனை கற்பனை செய்யும் போதே மூளையின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளான இடங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வலி சகிப்புத் தன்மை அதிகமாதல்
மூளையில் உள்ள முன்புற சிங்குலேட் மற்றும் மூளை இன்சுலார் போன்றவை தான் வலி தொடர்புள்ள பகுதிகள் ஆகும். உடலுறவின் போது ஏற்படும் சிறிய வலி முதல் பெரிய வலிகள் வரை அனைத்துமே இவற்றால் தான் சகித்துக் கொள்ளப்படுகின்றன.
முக பாவனைகள்
உடலுறவில் ஈடுபடும் போது முக பாவனைகள் என்னவோ வலி நிறைந்த செயலாகத் தான் காட்டுகிறது. ஆனால், இது ஒரு இன்பகரமான வலி தான். இவை அனைத்திற்கும் மூளை தான் காரணம். அனைத்தும் தெரிந்தும் மூளை இதனை இவ்வாறு தான் முகத்தில் காட்டுகிறது.
உச்சக்கட்ட சந்தோஷத்தை அடையும் போது..
ஒரு பெண் தன் உச்சக்கட்ட சந்தோஷத்தை அடையும் போது, ஹைப்போதலாமஸ் மற்றும் நியூக்ளியஸ் அகும்பென்ஸிலை மூளையில் மிகவும் செயல்பட செய்கிறது. இது இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் இது தான் சத்தமாக புலம்பவும் செய்கிறது. இது முற்றிலும் ஒரு வேறுபட்ட அனுபவம் தான்.