Home அந்தரங்கம் உடலுறவில் பெண்களுக்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன?

உடலுறவில் பெண்களுக்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன?

25

உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான விஷயமாக இருப்பினும் அதில் ஆண், பெண் இருவரின் ஆசைகளும் விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

ஆண்கள் விரும்பும் சில விஷயங்கள் பெண்ணுக்குப் பிடிக்காமல் போகலாம். அதேபோல் பெண்ணுக்குப் பிடித்த சில விஷயங்கள் ஆணுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

பொதுவாக ஆண்கள் உடலுறவு விஷயத்தில் மிக எளிதாகவும் வேகமாகவும் கிளர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களால் அப்படி உடனடியாகக் கிளர்ச்சியடைய முடியாது. ஆண்களின் செயல்பாடுகள், முன் விளையாட்டுகள் ஆகியவையே பெண்களை விரைவில் கிளர்ச்சியடையச் செய்யும்.

60 வயதுவரையிலும் உடலுறவில் ஆண்களுக்கு நாட்டம் இருந்துகொண்டே இருக்கிறதாம். அதிலும் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது உடலுறவு சார்நு்த எண்ணங்கள் அவர்களுக்கு வந்து போகிறதாம். ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பெண்களைவிட ஆண்களுக்குத் தான் உடலுறவில் இரண்டு மடங்கு ஆர்வம் இருக்கிறது.

ஆண்களுக்கு உடலுறவில் பேரார்வம் உண்டு. உடலுறவில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணத்தையும் தாண்டி, அதைப்பற்றிய தேடுதல் வேட்கை ஆண்களிடம் மிக அதிகமாக இருக்கிறது.

ஆண்களில் மூன்று பேரில் ஒருவர் நிச்சயம் சுயஇன்பம் பழக்கமுடையவராக இருக்கிறார்கள். மற்ற இரண்டு பேரில் பலரும் சுயஇன்பம் மேற்கொள்வதை ஒரு குற்ற உணர்வாகக் கருதிக் கொள்வதாலேயே தவிர்க்கிறார்கள்.

ஆண்களோடு ஒப்பிடுகையில் 40 சதவீதம் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆனால் ஆண்களைப் போல் அடிக்கடி ஈடுபடுவதில்லை.

உடலுறவில் அதீத ஆர்வமுடையவர்கள், காம இச்சை அதிகம் கொண்டவர்கள் பணம் கொடுத்தாவது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடம் போய் தங்களுடைய இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

கிளர்ச்சியடையும் விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். யாரேனும் உடலுறவு பற்றியோ அல்லது உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்தாலே கூட ஆண்களுக்குக் கிளர்ச்சி உண்டாகும். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது.

பெண்கள் தங்களுடைய உடலோடு நேரடியாகத் தொடர்பு கொண்டால் தான், தங்களுடைய உடலில் நேரடியாகத் தீண்டுதல் செய்தால் தான் கிளர்ச்சி அடைகிறார்கள்.

உடலுறவு விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன