Home ஆண்கள் உடலுறவில் ஆணுறுப்பு விறைப் படையும் போது வளைகிறது

உடலுறவில் ஆணுறுப்பு விறைப் படையும் போது வளைகிறது

62

bendஎல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும்போது போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கி ரி வரை கூட வளைவு இருக்க லாம்.
அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால் உங்கள் இல்லறமே
பாதிக்கப்படும் என்று அச்சம் கொ ள்ள வேண்டியதில்லை.
இனி ஆணுறுப்பிலே வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்க ளைப் பார்ப்போம்!
ஹைப்போ ஸ்பாடியாசிஸ் (Hypospadiasis)
சாதாரணமாக சிறுநீர் மற்றும் விந்து வெளியேறும் துளையான்து ஆணுறுப்பின் நுனியில்தான் இருக்கும் .ஆனால் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அத்துளையானது நுனிப்பகுதியில் அல்லாமல் அடிப்புறமாக ஆணுறுப்பின் தண்டுப் பகுதியில் இருக்கும். இதனால் ஆணுறுப்பு வளைந்துள்ளது போன்ற தோற்றம் ஏற்படலாம். இதற்கு சத்திரசிகிச்சை மூலம் வேறு ஒரு துளையை ஆணுறுப்பின் நுனியில் ஏற்படுத்துவதன் மூலம் தீர்வு காணப்படலாம்.
பைமொசிஸ் (phimosis)
பொதுவாக ஆணுறுப்பு விறைப்படையும் போது அதன் முன் தோல் பின்நோக்கி இழுபடும். ஆனால் சில பேரிலே இந்த முன்தோல் பின் நோக்கி இழுபட முடியாமல் இருககும். இதனால் ஆணுறுப்பிலே சில வேளைகளில் வளைவு ஏற்படலாம்
இதற்கு சிறிய சத்திர சிகிச்சை மூல ம் தீர்வு காணப்படலாம். இந்த சத்தி ர சிகிச்சை circumcision எனப்படும் , இது முஸ்லிம் மக்கள் செய்து கொள்ளும் சுன்னத்து எனப்படும் செயன் முறையாகும்.
சிறுநீர் வழிச் சுருக்கம்.(urethral stricture)
சிறுநீர் வெளியேறும் குழாய் போன்ற அமைப்பு ஆணுறுப்பின் உள்ளே இருக்கிறது. அது urethra எனப்படும். இது சுருங்கு வதால் ureththral strict ure) ஏற்படுகிறது. இதனா ல் கூட ஆணுறுப்பு வளை ந்துள்ளது போன்ற மாயை ஏற்படலாம்.
பயரோநியஸ் நோய் (Peyronie’s disease )
இந்த நோயினால் பாதி க்கப்பட்ட ஆணுறுப்பி லே தோலுக்குக் உள் ளாக இருக்கும் பகுதி சற்று தடிப்பு (கடினம டைவதால்) அந்த ஆ ணுறுப்பு விறைப்படை யும் போது இவ்வாறு தடிப்படைந்த பகுதி யை நோக்கி வளைந் து காணப்படும்.
சில வேளைகளில் அ வர்களுக்கு வலி கூட ஏற்படலாம்.
சில ஆண்களிலே உடலுறவிலேயும் பாதிப்பை ஏற்படுத்தலாம்..
முக்கியமாக இதனால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு மனதளவி லே பெரிய அழுத்தங்கள் ஏற்பட லாம்.அதுவே அவர்களின் இல் ல றத்தைப் பாதிக்கலாம்.
இந்த நோயின் அறிகுறிகள்
இது படிப்படியாக ஏற்படலாம் அல்லது சிலரிலே சடுதியாகக் கூட ஏற்படலாம்.
முக்கிய அறிகுறி ஆணுறுப்பு விறைப்படையும் போது ஒரு பக்கமாக வளைந்திருத்தல்.அநேகமானவர்களில் இந்த வளைவு மேல் நோக்கியதாகவே இருக்கும். ஆனாலும் சிலபேரில் கீழ் நோக்கியதாக அல்லது பக்கவாட்டில் இருக்கலாம்.
அடுத்த முக்கியமான அறிகுறி ஆணுறுப்பிலே வலி ஏற்படுதல்.
சில பேரிலே விறைப்புத்தன்மை ஏற்படுவதையே இது தடுக்கலாம்.
சிலவேளைகளில் ஆணுறுப்பு சிறிதாவது போன்ற தோற்றம் ஏற்படலாம்.
இது என்ன காரணத்தால் ஏற்படுகிறது?
சரியான காரணம் அறியப்படா விட் டாலும் , இது ஆணுறுப்பிலே ஏற்படும் காயங்கள் காரணமாக ஏற்படும் தழும்புகள் காரணமாகவே ஏற்படுவ தாக சொல்லப் படுகிறது.
புகைப் பிடிப்பவர்களுக்கும் , நீரழிவு நோயாளிகளுக்கும் இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்று சொல்லப் படுகிறது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது வைத்தியரை நாட வேண்டும்?
இந்த நோய் இருக்கும் எல்லா ஆண்களி லும் இது வலியை ஏற்படுத்துவதில்லை. அ தே போல வளைவு இருந்தாலும் இது எல் லோரிலும் உடலுறவுக்கு இடையூறாக இ ருப்பதும் இல்லை. ஆகவே ஆணுறுப்பிலே ஏற்படும் வளைவு காரணமாக உங்களுக்கு வலி ஏற்பட்டா லோ அல்லது அது உடலுறவுக்கு இடையூ றாக இருந்தால் மட்டுமே நீங்கள் வைத்தி யம் பெற்றுக் கொள்ள வேண்டியவர்யாகுறீர்கள்.
இதற்கு எவ்வாறான வைத்தியங்க ள் செய்யப்படலாம்?
மாத்திரைகள் மூலம் இதற்கு சரி யான தீர்வு கிடைப்பதற்கான சந்த ர்ப்பம் மிகக் குறைவு. சிறிய அறுவைசிகிச்சைமூலம் தடி ப்படைந்த பகுதி அகற்றப்படலாம்.
வளைந்த‌ ஆணுறுப்பு அது எந்த அளவுக்கு வளைந்து இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் .சிலவேளை அது சாதாரண வ ளைவாகக் கூட இருக்கலாம்.
இருந்தாலும் கூறியுள்ள விடய ங்கள் மூலம் அந்த நோய்களுக் கான சந்தர்ப்பம் உங்களுக்கு உள்ளது என்று நினைத்தாலோ அல்லது இது உங்களுக்கு பாலி யல் மற்றும் உளவியல் ரீதியாக பிரச்சினைகளைக் கொடுக்கிறதா என்பதைப் பொறுத்து நீங்கள் வைத்திய வசதியைப் பெற்றுக் கொள்ளுவது உகந்தது.
ஆனாலும் இதனால் உடலுற விலே ஈடுபடும் தகுதி இல்லை என்று தேவை இல்லாமல் மனதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.