பெண்களுக்கு உடலுறவின்போது தகுந்த எதிர்வினைச் செயல்கள் நடப்பதற்கும், பாலியல் கிளர்ச்சி தொடங்குவதற்கும் பெண்ணுறுப்பில் வழவழப்பு அவசியமாகும். பெண்ணுறுப்பில் வழவழப்புக் கூட்ட உதவும் இயற்கையான பொருள்கள் மூன்று உள்ளன.
அவற்றில் முக்கியமானது, பாலியல் கிளர்ச்சியின்போது பெண்ணுறுப்பில் இருக்கும் இரத்தக் குழாய்களின் சுவர்கள் விரிவடைவதால் ஒழுகும் பிளாஸ்மா எனும் திரவப் பொருளாகும். பெண்ணுறுப்பின் திறப்பில் இரண்டு பக்கங்களில் ஏதேனும் ஒன்றில் அமைந்திருக்கும் பார்த்தோலின் சுரப்பிகள், மியூக்கசைச் சுரக்கிறது, இது பெண்ணுறுப்பு சுவரில் திரவங்கள் சுரக்க உதவுகிறது. கருமுட்டை வெளியிடப்படும் சமயத்தில், கருப்பையின் வாய்ப் பகுதியில் இருந்து மியூக்கஸ் சுரக்கிறது.
ஆண்களுக்கு, பாலியல் கிளர்ச்சி ஏற்படும் சமயத்தில் அல்லது உடலுறவின் ஆரம்ப கட்டத்தில், விந்து வெளியேறுவதற்கு முன்பு ஒரு திரவம் வெளியாகும். இது கூப்பர் சுரப்பிகளால் சுரக்கப்படுகிறது, இதில் சிறுநீர்க்குழாய் சுரப்பிகளும் (சிறுநீர்க் குழாயில் மியூக்கஸ் சுரக்கும் சுரப்பிகள்) பங்களிக்கின்றன. விந்து வெளியாவதற்கு முன்பு சுரக்கும் திரவத்தின் பணிகளில் ஒன்று, வழவழப்பு கூட்டுவதாகும்.