Home அந்தரங்கம் உடலில் அந்தரங்க பகுதி முடியை ஷேவிங் செய்வது நல்லதா?

உடலில் அந்தரங்க பகுதி முடியை ஷேவிங் செய்வது நல்லதா?

163

இறைவன் படைப்பில் அதிசயம் மனித இனம். உடலில் ஒவ்வொரு உறுப்பும் ஒரு காரணத்துக்காக படைக்கப்பட்டதை போல, அந்தரங்க பகுதியில் வளரும் முடிகளும் ஒரு காரணத்திற்காக மட்டுமே படைக்கப்பட்டது. இல்லையென்றால் சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் ஏன் முடி வளர வேண்டும்? அதனை சங்கடமாக நினைத்து சிலர் அடிக்கடி முடியை நீக்க நினைக்கின்றனர். அதற்கு முன்னால், எதற்காக அங்கு முடி வளர்கிறது? அதன் நன்மைகள் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்தரங்க பகுதி முடிகள் இயற்கையாக, அந்த பகுதியில் எண்ணெய் சுரப்பியை தூண்டிவிட்டு, உடலில் மற்ற பகுதிகளை காட்டிலும், அந்தரங்க பகுதி தோல் மென்மையாக இருக்கச்செய்கின்றன. மரு, வைரஸ் தொற்று போனற தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை அந்தரங்க பகுதி முடிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் பெரோமோன்ஸின் சுரப்புக்கு உதவுகிறது. பாலியல் உணர்வை அதிகரிப்பதில் இது முக்கிய பங்கு வகிப்பதால், முடியை நீக்கும் போது, அந்த சுரப்பியின் செயல்திறன் குறைந்து பாலியல் உறவில் நாட்டம் இல்லாது போகும் நிலை வரும். உடலுறவு சம்பந்தமான நோய்களை தடுப்பதில், அந்தரங்க பகுதி முடிக்கு முக்கிய பங்கு உண்டு. உடலுறவின் போது குஷன் மாதிரி அமைந்து உராய்வு ஏற்படுவதை தடுக்கிறது.

இந்த மாதிரி பல நன்மைக்காகவே அப்பகுதியில் முடி வளர்கிறது. பலரும் இதைப்பற்றி பொதுவெளியில் பேசத்தயங்குவதால், போதிய விழிப்புணர்வு இன்றி முடி இல்லாமல் இருப்பது தான் நல்லது என்ற எண்ணம் மேலோங்கி காணப்படுகிறது. சொல்லப்போனால் ஒரு கட்டத்துக்கு மேல் தலைமுடி போல எல்லாம் பெரிதாக வளராது. அதற்கான அளவை எட்டியவுடன் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படும். எவ்வித தொந்தரவும் இல்லை என்றால், அந்தரங்க முடியை அகற்றாமல் இருப்பதே நல்லது.