Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை வரவேண்டுமா?

உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை வரவேண்டுமா?

29

sweatஎத்தகைய கடினமான கொழுப்பாக இருந்தாலும் இந்த எந்திரத்தை பயன்படுத்தினால் குறையும் என்று கூறும் விளம்பரதாரர்களை நம்பாதீர்கள். இத்தகைய எந்திரம் வயிற்று தசைகளை உறுதிபடுத்தி உங்கள் அமரும் தன்மையை சரி செய்கிறது.

ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு நாம் உடற்பயிற்சி மேற்கொண்டு சரியான உணவு முறையை பின்பற்றினால் தான் நிச்சயம் கொழுப்பு கரையும். இதயம் மற்றும் உடலை உறுதிப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்து வருவதன் மூலம் நம் உடலில் உள்ள அனைத்து கொழுப்புகளின் அளவையும் குறைக்க முடியும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை அவசியம் வர வேண்டும் உடற்பயிற்சி அல்லது வொர்க் அவுட் செய்யும் போது வியர்வை வர வேண்டும் என்று அவசியம் கிடையாது. வியர்வை இல்லாமலே கூட நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது பல கலோரிகளை எரித்திட முடியும். அது சிறிது தூரம் நடக்கும் நடை பயிற்சியாக இருந்தாலும் சரி அலல்து எடைகளை தூக்கி பயிற்சி செய்தாலும் சரி கலோரிகள் எரிக்கப்படும் – வியர்வை இல்லாமலே.

உடல் எடையை குறைக்க விஷப் பரிட்சையை உடற்பயிற்சியில் செயல்படுத்தாதீர்கள். உங்களுக்கு அதனை செய்யும் போது சரியாக உணர்ந்தாலும் கூட, சீக்கிரம் இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் உங்கள் உடலை காயப்படுத்துகிறீர்கள் என்று தான் அர்த்தம். சில நாட்கள் அல்லது வாரங்கள் விடுமுறைக்குப் பின் மீண்டும் உடற்பயிற்சியை துவங்கினால் உங்களுக்கு தினமும் செய்யும் பழைய உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இவ்வாறு உடனடியாக கடினமான உடற்பயிற்சிகளை செய்யத் துவங்கும் போது அந்நேரத்தில் மிக ஆனந்தமாக இருக்கலாம் ஆனால் அதன் விளைவு காலப்போக்கில் மட்டுமே தெரியும்.