Home அந்தரங்கம் உச்சம் அடைந்த உங்கள் மனைவியின் முகத்தை பார்த்தது உண்டா? பேச தயங்கும் விசயம் தான். கடந்து...

உச்சம் அடைந்த உங்கள் மனைவியின் முகத்தை பார்த்தது உண்டா? பேச தயங்கும் விசயம் தான். கடந்து செல்வதும் அதை சரி செய்வதும் உங்கள் விருப்பம்.

130

பொதுத்தளத்தில் விவாதிக்கக்கூடிய விசயமில்லை இது என்பர் பலர். முகம் கூட சுழிப்பார் சிலர். ஆனால் மறைத்து வைப்பதால் எந்த பலனும் இல்லை. இது ஒரு பிரச்சனையாகவே பார்க்காத கணவன்மார்கள் எவ்வளவு பேரு? பாதிக்கப்படும் பெண்களே இதைத் தன் துணையிடம் பகிர்வதில்லை. அவர்களும் அதைக்கேடகும் மனநிலையில் இருப்பதில்லை. காதல் காமம் கலவி இவை இல்லாமல் மனித இனமே இல்லை.
இவை சரியாக அமையாத இல்லறத்தில் அனைத்தும் கடமைக்கே நடக்கும். உங்கள் வீட்டில் அப்பிடித்தான் என்றால் மேல படியுங்கள்.
ஒரு பெண்ணின் மனநிலையில் விவரிக்க வார்த்தைகளே இல்லை எனக்கூறுமளவுக்கு கொடுமையானது அது. என்றாவது ஒருநாள் என்றால் பெரிய அளவில் பாதிக்காது. இரண்டு மூன்று முறை தொடர்ந்தோ இல்லை அடிக்கடியோ இப்படி நிகழ்ந்தால் அப்பெண்ணிறகு முதலில் கலவியின் மேல் வெறுப்பு வரும்.

husband wife couples kiara

ஆண்களின் உச்சம் என்பது விந்து வெளியில் வந்த உடன் அடைவது. ஆனால் பெண்களுக்கு உச்சநிலை அடைய சிறிது நேரம் ஆகும். முதலில் பெண்களின் மனதை புரிந்துகொள்ளுங்கள். அதற்கு Foreplay மிகவும் முக்கியம். பெண்ணுறுப்பின் அமைப்பு உங்கள் மனைவியிடம் அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக பெண்களின் உணர்வை தூண்டும் கிளிட்டோரஸ் பகுதி மிகவும் சிறிய அளவானது என்று நம்மில் பெரும்பாலானோர் எண்ணியிருப்போம். கிளிட்டோரஸ் பகுதியானது மிகவும் பெரியதாகும். சராசரியாக சுமார் 8000 நரம்புகளின் முடிவாக கிளிட்டோரஸில் இணைகிறது. 18 வகையான வெவ்வேறு நரம்பு மண்டலத்தின் இணைப்பாகும்.

அதனால் தான் இங்கு தூண்டும் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் பெண்ணின் உடலில் ஏற்படும் பல மாற்றங்களால் அவர்கள் உங்களுக்கு திருப்பி தரும் இன்பமும் அதிகம் ஆகும். இதோட உச்சக்கட்டம் தான் உங்கள் மனைவியின் முகத்தில் தெரியும் அந்த ஒளி மற்றும் சந்தோசம். அதை உறுதிப்படுத்திக்கொண்டு உங்கள் உச்சத்தை அடையுங்கள்.

ஒரு வேளை இதற்கு தான் ‘லேடீஸ் First ‘ என்று ஆங்கிலத்தில் சொல்வர்களோ என்னவோ!!

நீங்கள் உச்சம் அடையாமல் இருக்கும் நாள்களில் நீங்கள் எவ்வாறு எரிச்சல் , கோபம் வருமோ,அதே கோபமும் எரிச்சலும் பெண்களுக்கும் ஏற்படும். இந்த உணர்வுகளை மதிக்காமல் இருப்பதனால் தான் உங்கள் குடும்ப வாழ்க்கை சீரான ஓட்டம் இல்லாமல் செல்வதற்கு காரணம்.

அதே சமயம், பெண்களே உங்கள் ‘கணவனின் துணை கொண்டு தான் காமனை வென்றாகவேண்டும்’ என்பதை புரிந்து கொண்டு கணவனிடம் மனதை பகிர்ந்து கொள்ளுங்கள்.