இன்ப எழுச்சி நிலையில் உணர்வுகளைத் தூண்டுதல்கள் மேலும் மேலும் தீவிரமகும் போது இதுவரையில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பாலுணர்வு இறுக்கத்தை உடல் இனியும் வைத்துக்கொள்ள இயலாமல் திடீரென்று உத்வேகத்துடன் வெளியே தள்ளுகிறது.
இந்த நிலையையே உச்ச நிலை என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை க்ளைமாக்ஸ் அல்லது கமிங் என்கின்றனர். இந்த நிலை நீடிக்காது. மிக மிகக் குறுகிய நிலை. இந்த நிலையில் சில நொடிகளில் தாளகதியில் தசைச்சுருக்கங்கள் தோன்றி மிகத் தீவிரமான உணர்வலைகள் உணரப்படுகின்றன.
உடனே நெகிழ் நிலை ஏற்படுகிறது. உடற்கூறு அடிப்படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பம் அல்லது மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த அனுபவம் என்று பல வகையாகக் கூறப்படுகிறது. உச்சக்கட்டம் ஆணுக்கு-ஆண் ஒரே ஆணுக்கு, உறவுக்கு உறவு மாறுபடும். சில சமயம் உணர்வலைகள் ஒருங்கே கூடி ஒரு பெரிய வெடிப்புடன் உச்சக்கட்டம் நேரலாம். சில உச்சக்கட்டங்கள் மிக மிக மென்மையாக உணரப்படலாம். உச்சக்கட்டம் என்பது தீவிரம் அல்லது தீவிரமின்மை என்பது உறவு கொள்ளும் நபர், நேரம், எதிர்பார்ப்பு, சூழ்நிலை, மனநிலை, ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அமையும். எனவே இதில் இத்தனை மாறுபாடுகள் உள்ளன.