வாழ்க்கைத் துணையை சந்தோஷமாக வைத்துக்கொள்வதைப் போன்றதொரு மகிழ்ச்சியான விஷயம் இவ்வுலகில் எதுவுமில்லை. நமக்கும், நமது வாழ்க்கைத் துணைக்கும் நெருக்கமான இடமான படுக்கையறையை, அவரின் விருப்பத்துக்கேற்ப மாற்றியமைப்பதன் மூலம், அவரது மனதில் நீங்கா இடம்பிடிக்கலாம்.
படுக்கையறையின் தீம், நமது மனநிலையை மாற்றக்கூடியது. அதனால் மனதை மென்மையாக மாற்றக்கூடிய, அதேசமயம் சற்று கவர்ச்சியுடைய பூக்களால் அலங்கரிக்கலாம். நமக்கு மிகவும் பிடித்த, படுக்கையறைக்குப் பொருத்தமான தீமை தேர்ந்தெடுப்பது நல்லது.
டேபிள் டாப்களின் விலை தொடர்ந்து அதிகமாகவே உள்ள காரணத்தால், நாமே சொந்தமாக சதுர வடிவ டேபிள் டாப்களை, நமது விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். எம்பிராய்டரி வகையிலான மேலுறைகளை அதில் பயன்படுத்திக் கொள்வது இன்னும் கூடுதல் அழகைத் தரும்.
அவ்வப்போது புதிய பெட் லைனிங்களை மாற்றி அமைக்க வேண்டும். அடிக்கடி அவற்றை மாற்றுவதன் மூலம், அறை புத்தம் புதிதாக இருப்பதை போல உணர முடியும். நிறம் மற்றும் அதன் விலைக்கேற்ற வகையில் பெட் லைனிங்கள் கிடைக்கின்றன.
படுக்கையறையின் சுவர்களில் நமக்கு பிடித்த வண்ணங்களில் வண்ணம் தீட்டுவதன்மூலம், நம்முடைய மனதை எப்போதும் பிரெஷ்ஷாகவே வைத்திருக்கலாம். தனித்துவம் மிக்க அலங்கார பொருட்களைக் கொண்டு படுக்கையறையை அழகாக மாற்றிக் கொள்ளலாம். அதோடு, சுவர்களில் ஒட்டக்கூடிய பெரிய அளவிலாக ஸ்டிக்கர்கள் கிடைக்கின்றன.
படுக்கையறைக்குத் தகுந்தபடி கலைநயம் மிக்க ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்டிக் கொள்ளலாம். அவை மற்ற அறைகளிலிருந்து படுக்கையறையை வேறுபடுத்திக் காட்டும்.