Home உறவு-காதல் உங்க காதலியை உங்களுக்கேற்ற மாதிரி மாற்ற

உங்க காதலியை உங்களுக்கேற்ற மாதிரி மாற்ற

18

காதலில் விழுவது என்பது சுலபம். ஏனெனில் காதலுக்கு கண்ணில்லை. ஆனால் காதல் என்ற ஒன்று வந்துவிட்டால், எதிர்காலத்தைப் பற்றி நினைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில் சுலபத்தில் கண்மூடித்தனமாக வரும் காதல், திருமணத்திற்கு பின்னும் இருவரும் நீண்ட நாட்கள் சந்தோஷமாக காதலர்களாக வாழ வேண்டுமெனில், இருவருக்கிடையே ஒரு நல்ல புரிதல் மற்றும் இருவரும் இருவருக்கேற்றவாறு இருக்க வேண்டும். பொதுவாக பார்த்ததும் வரும் காதலானது, காதலிப்பவரைப் பற்றி எந்த ஒரு விஷயமும் தெரியாமல் வரும். இதனால் இந்த காதல் சில சமயங்களில் எளிதில் முறிய வாய்ப்புள்ளது. ஆனால் நன்கு புரிந்து, பிடித்ததை இருவரும் பகிர்ந்து கொண்டு, பின்னர் வரும் காதல் மிகவும் வலுவாக இருக்கும். இருப்பினும் அவற்றில் சில மனஸ்தாபங்கள் வரும். குறிப்பாக ஆண்களது மனதிற்கேற்ப பெண்கள் நடப்பது என்பது சற்று கடினம். ஏனெனில் ஆண்களுக்கு திருமணம் என்ற ஒன்று நெருங்கும் போது, அவர்களது கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் அதிகம் இருக்கும். அதேப் போன்று காதல் திருமணமாக இருந்தால், ஆண்களின் குடும்பத்தினருக்கு ஏற்ற வகையில் பெண்கள் நடந்தால் தான், திருமணமானது எந்த ஒரு பிரச்சனையுமின்றி நடக்கும். ஆகவே ஆண்கள் தங்கள் காதலியை திருமணம் செய்வதற்கு முன்னர், அவர்களிடம் இரு விஷயங்களைப் பற்றி ஆலோசிக்க வேண்டும். அவை அவர்களது குடும்பம் மற்றும் பொருளாதாரம். ஏனெனில் அவ்வாறு ஆலோசித்துக் கொண்டால், காதலியை குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தும் போது, அது அவர்களுக்கு குடும்பத்தினரை மடக்குவதற்கு எளிதாக இருக்கும். இதுப் போன்று ஆண்கள் காதலியை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் காதலியிடம் கலந்தாலோசித்து நடந்தால், திருமண வாழ்க்கை செழிப்புடன் இருக்கும்.