உடலில் எலும்புகள் இல்லாத உறுப்புகளில் நாக்கும் ஒன்று. உணவை உண்பது, உணவை மெல்வது, உணவை
விழுங்குவது, பானங்களை அருந்துவது போன்ற முக்கியமான உணவுச் செரிமான இயக்கத்துக்கு உதவுவது நாக்கின் முக்கியப் பணிகள். இவை தவிர, நாம் பேசுவதற்குத் தேவையான ஒலி வடிவத்தைத் தருவதற்கு நாக்கின் அசைவுகள் முக்கியம்.
இயல்பான நாக்கு சிவப்பும் ஊதாவும் கலந்த நிறத்தி ல் இருக்கும். ‘ மியூக்கஸ்’ எனும் வெளி உறையால் மூடப்பட்டிருக்கும். நாக்கின்மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான அரும்புகள் அமைந்துள்ளன. நாம் உண்ணும் உணவின் சுவையை அறிய உதவுவதும் நாக்குதான். அதற்கு உதவும் வகையில் நாக்கில் ‘சுவையுணர்வு ஏற்பிகள்’ ஏராளமாக உள்ளன. இவை இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான் கு அடிப்படைச் சுவைகளை நமக்கு உணர்த்துகின் றன. நாக்கின் நுனி, இனிப்புச் சுவையை உணர்த் தும். உப்புச் சுவையை நாக்கின் மேற்புறம் அறியு ம். நாக்கின் பின்புறத்தில் கசப்பு தெரியும். புளிப்பு ச் சுவையை நாக்கின் பக்கவாட்டுப் பகுதிகள் உணர்த்தும்.
நாக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தவறினால் பாக்டீரியா,வைரஸ், ‘கான்டிடா ஆல்பிகன்ஸ்’ எனும் பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் நாக்கைப் பாதிக்கும். அப் போது நாக்கில் புண்கள் வரும். இரும்புச்சத்து, வைட்டமின் சத்து உட்பட்ட பல ஊட்டச்சத்துகள் குறைவாக உள்ளவர்க ளுக்கு நாக்கில் அடிக்கடி புண்கள் வரும். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து ள்ளவர்களுக்கும், வெற்றிலை பாக்கு, பான் மசாலா, புகையிலை போடுப வர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் ஆகியோருக்கும் நாக்கி ல் புண் வரும் வாய்ப்பு அதிகம். பற்கள் கூர்மை யாக இருந்தால் அவை நாக்கைக் குத்திப் புண்ணாக்கிவிடும்.
ஸ்டீராய்டு, ‘ஆன்டிபயாடிக்’ போன்ற சில மருந் துகளை அளவுக்கு அதிக மாக எடுத்துக் கொள் ளும்போதும், சில மருந்துகளின் ஒவ்வாமை காரண மாகவும் நாக்கில் புண் ஏற்படுவதுண்டு. தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு உண்டாகிற மன அழுத்தம், தூக்க மின்மைகூட நாக்கில் புண் உண்டாக வழி அமைக்கும். பற்களில் ‘கிளிப்’ போட்டிருப்ப வர்களுக்கும் செயற்கைப் பல்செட் சரியாகப் பொருந்தாதவர்களுக்கும் நாக்கில் புண் ஏற் படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. இப்போது குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருகிற து. கட்டுப்படுத்தத் தவறினால் நாக்கில் புண் வரும்.
இதனிடையே நம் நாக்கில் ஏற்படும் வண்ண மாற்றங்களை வைத்து நம் உடல்நலத்தைப் பற்றி அறிந்துக் கொள்ளலாமாம்!
சிவப்பான நாக்கு
வெற்றிலைப் போடாமலேயே சிலருக்கு நாக்கு மிக அதிகமாக சிவந்து காணப்படும். இது வைட்ட மின் பி12 மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு இரு ப்பதற்கான அறிகுறியாகும். இதனால் காரமான அல்லது சூடான உணவுகள் சாப்பிடும் போது வலி ஏற்படும். பெரும்பாலும் சுத்த சைவமாக இருப்பவர்களுக்கு நாக்கு இப்படி மிக சிவப்பாக இருக்கும். மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கேற்ப உணவுகள் எடுத்துக் கொள்வது அவசியம்.
கரு நாக்கு
கரு நாக்கு (கருமை அல்லது ப்ரௌன்நிற படிவ ம் நாக்கில் படர்ந்திருக்கும்) உடையவர்கள் சரியாக அவர்களது வாய் மற்றும் பற்களை பரா மரிப்பது இல்லை என்று அர்த்தமாம். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும். நீங்க ள் சாப்பிடும் உணவின் ருசி மாறுபட்டு உணர்வீர்கள். நல்ல டென்டல் மரு த்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதிகமாக புகை மற்றும் மது அருந்துபவர்களுக்கு இவ்வாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வெள்ளை நாக்கு
நாக்கில் வெள்ளை நிறத்தில் சீஸ் போன்று படிவம் படர்ந்திருந்தால் வாயில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிரு க்கிறது என்று அர்த்தம். இந்த வாய் ஈஸ்ட் தொற்று ஏற்படுவது, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமைக் குறைகிறது என்பதற்கான அறிகுறி. இதனால் ஆன்டி-பயாட்டிக் உணவுகள் அதிகம் உட்கொள்ள வேண்டிய து அவசியம்.
நாக்கில் சுருக்கங்கள்
வயது அதிகமானாலோ அல்லது பூஞ்சைத் தொற்று ( Fungal) ஏற்பட்டாலோ இவ்வாறு நாக்கில் சுருக்கம் அல் லது வெட்டு ஏற்பட்டது போல இருக்கும். ஆன்டி-ஃபங்கள் (Anti-Fungal) மருந்துகள் எடுத்துக் கொள்வது தான் இந்த பிரச்சனைக்கானத் தீர்வு.
கீழ் நாக்கில் வெள்ளைப் படிவம்
சிலருக்கு கீழ் நாக்கில் வெள்ளைப் படிவம் ஏற்பட்டிருக்கும். இதை லியூக் கோப்லாக்கிய (leukoplakia) என்று கூறுகின்றனர். சரியான செல் வளர்ச்சி இல்லாத போது இது தோன்றுகி றது. அதிகமாய் புகைப்பவர்களுக்கு இந்த கீழ் நாக்கு வெள்ளைப் படிவம் ஏற்படுகிறது. இது காலப் போக்கில் புற்றுநோயாக மாறுவதற்கு கூட வாய்ப்புகள் இருப்பதா க மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிவப்பு சிதைக் காயம்
நாக்கில் சிவப்பாக சிதைக் காயம் ஒரு சில வாரங் களுக்கு மேல் தொடர் ந்து இருப்பதுபோல இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சிகச்சை மேற்கொள்ளு ங்கள். இது நாக்குப் புற்றுநோயாக இருக்க வாய்ப்பிரு க்கிறது. காரமான உணவுகள் சாப்பிட்டால் ஓரிரு வாரம் இதுப் போன்ற சிவந்த சிதைக்காயம் ஏற்படுவது சகஜம் தான்.
நாக்கு எரிச்சல்
உங்கள் நாக்கு எரிச்சலுக்கு நீங்கள் உபயோகப் படுத்தும் பற்பசைக் (Tooth Paste) கூடக் காரண மாக இருக்கலாம். மற்றும் பெண்களுக்கு மாத விடாய் நிற்கும் காலம் நெருங்கும்போது இது போன்ற நாக்கு எரிச்சல் ஏற்படும்.